Skip to the text
பெருமாள் திருமொழி

1. இருளிரியச் சுடர்மணிகள்

குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

குலசேகர ஆழ்வார் திருவரங்கத்தில் தொடங்குகிறார். ஒளிரும் மணிகள் இருளை விரட்டும் அரங்கனின் திருமுன்பு நின்று, அவ்விடத்திலேயே ஏதேனும் ஒரு தொண்டாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறார். அரசனாக இருந்தும், அரசைவிட அங்கு ஒரு படியாக இருப்பதே பெரிது என்னும் மனநிலை இப்பதிகத்தில் வெளிப்படுகிறது.

பெருமாள்‌ திருமொழி - 1 இருளிரியச்‌ சுடர்மணிகள்‌ (திருவரங்கனைக்‌ கண்டு களிக்க ஆசைப்படுதல்‌)

647

இருளிரியச்‌ சுடர்மணிகள்‌ இமைக்கும்‌ நெற்றி இனத்துத்தி அணிபணம்‌ ஆயிரங்கள்‌ ஆர்ந்த அரவரசப்‌ பெரும்‌ சோதி அனந்தன்‌ என்னும்‌ அணி விளங்கும்‌ உயர்‌ வெள்ளை அணையை மேவி ர்‌ திருவரங்கப்‌ பெரு நகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக்‌ கையால்‌ அடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டு என்‌ கண்ணிணைகள்‌ என்று கொலோ களிக்கும்‌ நாளே

648

வாயோரீரைஞ்தூறுதுதங்கள்‌ ஆர்ந்த வளை உடம்பின்‌ அழல்‌ நாகம்‌ உமிழ்ந்த செந்தீ வியாத மலர்ச்‌ சென்னி விதானமே போல்‌ மேன்மேலும்‌ மிக எங்கும்‌ பரந்ததன்‌ கீழ்‌ காயாம்பூ மலர்ப்‌ பிறங்கலன்ன மாலைக்‌ கடியரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ மாயோனை மணத்‌ தூணே பற்றி நின்று என்‌ வாயார என்று கொலோ வாழ்த்தும்‌ நாளே

649

எம்மாண்பின்‌ அயன்‌ நான்கு நாவினாலும்‌ எடுத்தேத்தி ஈரிரண்டு முகமும்‌ கொண்டு எம்மாடும்‌ எழிற்‌ கண்கள்‌ எட்டினோடும்‌ தொழுதேத்தி இனிதிறைஞ்ச நின்ற செம்பொன்‌ அம்மான்‌ தன்‌ மலர்க்‌ கமலக்‌ கொப்பூழ்‌ தோன்ற அணியரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ அம்மான்‌ தன்‌ அடியிணைக்‌ கீழ்‌ அலர்கள்‌ இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும்‌ நாளே

650

மாவினை வாய்‌ பிளந்துகந்த மாலை வேலை வண்ணணை என்‌ கண்ணணை வன்குன்றம்‌ ஏந்தி ஆவினை அன்றுய்யக்கொண்ட ஆயரேற்றை அமரர்கள்‌ தந்தலைவனை அந்தமிழின்‌ இன்பப்‌ பாவினை ்‌ அவ்வடமொழியைப்‌ பற்றற்றார்கள்‌ பயிலரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ கோவினை நாவுற வழுத்தி என்தன்‌ கைகள்‌ கொய்ம்மலர்‌ தூய்‌ என்று கொலோ கூப்பும்‌ நாளே (க)

651

இணையில்லா இன்னிசையாழ்‌ கெழுமி இன்பத்‌ தும்புருவும்‌ நாரதனும்‌ இறைஞ்சி ஏத்த துணையில்லாத்‌ தொன்மறை நூல்‌ தோத்திரத்தால்‌ தொன்மலர்க்கண்‌ அயன்‌ வணங்கி ஓவாதேத்த மணிமாட மாளிகைகள்‌ மல்கு செல்வ மதிளரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ மணிவண்ணன்‌ அம்மானைக்‌ கண்டு கொண்டு என்‌ மலர்ச்‌ சென்னி என்று கொலோ வணங்கும்‌ நாளே

652

அளிமலர்‌ மேல்‌ அயன்‌ அரன்‌ இந்திரனோடு ஏனை அமரர்கள்‌ தம்‌ குழுவும்‌ அரம்பையரும்‌ மற்றும்‌ தெளிமதி சேர்‌ முனிவர்கள்‌ தம்‌ குழுவும்‌ முந்தித்‌ திசை திசையில்‌ மலர்‌ தூவிச்‌ சென்று சேரும்‌ களிமலர்‌ சேர்‌ பொழில்‌ அரங்கத்து உரகமேறிக்‌ கண்வளரும்‌ கடல்‌ வண்ணர்‌ கமலக்‌ கண்ணும்‌ ஒளிமதி சேர்‌ திருமுகமும்‌ கண்டு கொண்டு என்‌ உள்ளம்‌ மிக என்று கொலோ உருகும்‌ நாளே

653

மறம்‌ திகழும்‌ மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்கள்‌ அடக்கி இடர்ப்பாரத்‌ துன்பம்‌ துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை இல்லாத்‌ தொன்னெறிக்கண்‌ நிலை நின்ற தொண்டரான அறம்‌ திகழும்‌ மனத்தவர்‌ தம்‌ கதியைப்‌ பொன்னி அணியரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ நிறம்‌ திகழும்‌ மாயோனைக்‌ கண்டு என்‌ கண்கள்‌ நீர்‌ மல்க என்று கொலோ நிற்கும்‌ நாளே

654

கோலார்ந்த நெடும்‌ சார்ங்கம்‌ கூனற்‌ சங்கம்‌ கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்‌ காலார்ந்த கதிக்‌ கருடன்‌ என்னும்‌ வென்றிக்‌ கடும்‌ பறவை இவை அனைத்தும்‌ புறம்‌ சூழ்‌ காப்ப சேலார்ந்த நெடூங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கதரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ மாலோனைக்‌ கண்டு இன்பக்‌ கலவி எய்தி வல்வினையேன்‌ என்று கொலோ வாழும்‌ நாளே

655

தூராத மனக்‌ காதல்‌ தொண்டர்‌ தங்கள்‌ குழாம்‌ குழுமித்‌ திருப்புகழ்கள்‌ பலவும்‌ பாடி ஆராத மனக்‌ களிப்போடு அழுத கண்ணீர்‌ மழை சோர நினைந்துருகி ஏத்தி நாளும்‌ சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்‌ திருவரங்கதரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ போராழி அம்மானைக்‌ கண்டு துள்ளிப்‌ பூதலத்தில்‌ என்று கொலோ புரளும்‌ நாளே

656

வன்பெரு வானகம்‌ உய்ய அமரர்‌ உய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசர்‌ உய்ய துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர அகமகிழும்‌ தொண்டர்‌ வாழ அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளி கொள்ளும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்து அடியார்‌ தங்கள்‌ இன்பமிகு பெரும்‌ குழுவு கண்டு யானும்‌ இசைந்துடனே என்று கொலோ இருக்கும்‌ நாளே

657

திடர்விளங்கு கரைப்‌ பொன்னி நடுவு பாட்டுத்‌ திருவரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ கடல்விளங்கு கருமேனி அம்மான்‌ தன்னைக்‌ கண்ணாரக்‌ கண்டுகக்கும்‌ காதல்‌ தன்னால்‌ குடைவிளங்கு விறல்தானைக்‌ கொற்ற வொள்வாள்‌ கூடலர்‌ கோன்‌ கொடைக்‌ குலசேகரன்‌ சொற்‌ செய்த நடைவிளங்கு தமிழ்‌ மாலை பத்தும்‌ வல்லார்‌ நலம்‌ திகழ்‌ நாரணன்‌ அடிக்கீழ்‌ நண்ணுவாரே