Skip to the text
நாச்சியார் திருமொழி

4. தெள்ளியார் பலர்

ஆண்டாள் · முதலாயிரம்

Essence of this decad

திருமாலிருஞ்சோலை மணாளனை நோக்கிய பதிகம். தெளிந்தவர் பலர் கைதொழும் தேவனாகிய அவ்வள்ளலின் திருவடிகளைத் தொழ விரும்புகிறாள். அவன் பள்ளிகொள்ளும் இடத்தை நினைத்து, அங்குச் சென்று சேரும் ஆவலை வெளிப்படுத்துகிறாள். தொலைவில் இருக்கும் ஒருவரை நோக்கி மனம் நகர்ந்து கொண்டே இருப்பதே இப்பதிகத்தின் இயக்கம்.

நாச்சியார்‌ திருமொழி - 4 தெள்ளியார்‌ பலர்‌ (கூடலிழைத்தல்‌)

534

தெள்ளியார்‌ ர பலர்‌ கைதொழும்‌ தேவனார்‌ வள்ளல்‌ மாலிருஞ்சோலை மணாளனார்‌ பள்ளி கொள்ளும்‌ இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில்‌ நீ கூடிடு கூடலே

535

காட்டில்‌ வேங்கடம்‌ கண்ணபுர நகர்‌ வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்‌ ஓட்டரா வந்து என்‌ கைப்பற்றி தன்னோடும்‌ கூட்டுமாகில்‌ நீ கூடிடு கூடலே

536

பூமகன்‌ புகழ்‌ வானவர்‌ போற்றுதற்‌ காமகன்‌ அணிவாணுதல்‌ தேவகி மாமகன்‌ மிகு சீர்‌ வசுதேவர்‌ தம்‌ கோமகன்‌ வரில்‌ கூடிடு கூடலே

537

ஆய்ச்சிமார்களும்‌ ஆயரும்‌ அஞ்சிட பூத்த நீள்‌ கடம்பேறிப்‌ புகப்‌ பாய்ந்து வாய்த்த காளியன்‌ மேல்‌ நடமாடிய கூத்தனார்‌ வரில்‌ கூடிடு கூடலே க

538

மாட மாளிகை சூழ்‌ மதுரைப்‌ பதி நாடி நந்தெருவின்‌ நடூவே வந்திட்டு ஓடைமா மதயானை உதைத்தவன்‌ கூடுமாகில்‌ நீ கூடிடு கூடலே

539

அற்றவன்‌ மருதம்‌ முறிய நடை கற்றவன்‌ கஞ்சனை வஞ்சனையினால்‌ செற்றவன்‌ திகழும்‌ மதுரைப்‌ பதி கொற்றவன்‌ வரில்‌ கூடிடு கூடலே

540

அன்று இன்னாதன செய்‌ சிசுபாலனும்‌ நின்ற நீள்‌ மருதும்‌ எருதும்‌ புள்ளும்‌ வென்றி வேல்‌ விறல்‌ கஞ்சனும்‌ வீழ முன்‌ கொன்றவன்‌ வரில்‌ கூடிடு கூடலே

541

ஆவல்‌ அன்புடையார்‌ தம்‌ மனத்தன்றி மேவலன்‌ விரை சூழ்‌ துவராபதிக்‌ காவலன்‌ கன்று மேய்த்து விளையாடும்‌ கோவலன்‌ வரில்‌ கூடிடு கூடலே

542

கொண்ட கோலக்‌ குறள்‌ உருவாய்ச்‌ சென்று பண்டு மாவலி தன்‌ பெரு வேள்வியில்‌ அண்டமும்‌ நிலனும்‌ அடி ஒன்றினால்‌ கொண்டவன்‌ வரில்‌ கூடிடு கூடலே

543

பழகு நான்மறையின்‌ பொருளாய்‌ மதம்‌ ஒழுகு வாரணம்‌ உய்ய அளித்த எம்‌ அழகனார்‌ அணியாய்ச்சியர்‌ சிந்தையுள்‌ குழகனார்‌ வரில்‌ கூடிடு கூடலே

544

ஊடல்‌ கூடல்‌ உணர்தல்‌ புணர்தலை நீடு நின்ற நிறை புகழ்‌ ஆய்ச்சியர்‌ கூடலைக்‌ குழற்‌ கோதை மூன்‌ கூறிய பாடல்‌ பத்தும்‌ வல்லார்க்கு இல்லை பாவமே