நாமமாயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன் போதரு காலமென்று பங்குனி நாள் கடை பாரித்தோம் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
2. நாமமாயிரம்
ஆண்டாள் · முதலாயிரம்
Essence of this decad
நோன்பு தொடர்கிறது; ஆண்டாள் தன் வேண்டுதலை வெளிப்படையாகச் சொல்கிறாள். "ஆயிரம் நாமங்களால் ஏத்தப்படும் நாராயணனை, என் மாமியின் மகனாகவே பெற்றால் எங்கள் துயர் தீரும்" என்கிறாள். காமனிடம் கேட்பதுபோலப் பேசினாலும், கேட்கும் பொருள் மட்டும் மாறவே இல்லை. விருப்பத்தை மறைக்காமல் சொல்லும் நேர்மை இப்பதிகத்தின் வலிமை.
நாச்சியார் திருமொழி - 2 நாமமாயிரம் (இடைப் பெண்கள் சிற்றில் சிதைக்க வேண்டாவென்று கண்ணனை வேண்டுதல்)
இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய் என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே
குண்டூுநீருறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னைக் கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல் வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம் தெண் திரைக் கடற்பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பெய்யுமா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
வெள்ளை நுண்மணற் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் ர் உள்ளமோடி உருகலல்லால் உரோடம் ஒன்றுமிலோம் கண்டாய் கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே
முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்தொறும் சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்
பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் ஓதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும் சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
வட்டவாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்டமா விளையாடூுவோங்களைச் சிற்றில் ஈடழித்தென் பயன் தொட்டூதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் வண்ணனே
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய் எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்
சீதைவாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை ர் வேதவாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் தன் கோதைவாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே