மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ
1-3. மாணிக்கம் கட்டி
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
யசோதையாக நின்று ஆழ்வார் பாடும் தாலாட்டு. பிரமன், சிவன், இந்திரன், வருணன், குபேரன், திருமகள், பூமாதேவி என ஒவ்வொரு தெய்வமும் தொட்டில், கிண்கிணி, ஆரம், துளசி மாலை என ஏதேனும் ஒன்றைக் குழந்தைக்கு அன்புடன் அனுப்புகின்றன. "அழேல் அழேல், தாலேலோ" என்று தாய் தேற்றுகிறாள். உலகையே அளந்தவனை ஒரு தாய் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்கும் இனிமை இப்பதிகத்தின் சிறப்பு.
பெரியாழ்வார் திருமொழி 1-3 மாணிக்கம் கட்டி (கண்ணனைத் தொட்டிலிலிட்டூத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இஇடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான் உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்துவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ
எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச் சிரவணன் தொழுதுவனாய் நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மாதக்கவென்று வருணன் விடுதந்தான் சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ் சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை உச்சிமணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்யகலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்தணையானே தாலேலோ
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே