Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

5-4. சென்னியோங்கு

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

திருவேங்கடமுடையானிடம் தன்னையும் தன் உடைமைகளையும் ஒப்படைத்து ஆழ்வார் நிறைவு செய்யும் பதிகம். "உலகு வாழ நின்ற நம்பீ, தாமோதரா" என்று அழைத்து, தன்னிடம் உள்ள அனைத்தையும் அவனுடையதாக்குகிறார். நானூற்று எழுபத்து மூன்று பாசுரங்களாய் நீண்ட இத்திருமொழி, குழந்தையைத் தாலாட்டியவரே இறுதியில் தம்மையே அவனிடம் தந்துவிடுவதோடு முடிகிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 5-4 சென்னியோங்கு (எம்பெருமான்‌ தமது திருவுள்ளத்திற்‌ புகுந்தமையால்‌ ஆழ்வார்‌ தாம்‌ பெற்ற நன்மைகளைக்‌ கூறி உகத்தல்‌)

463

சென்னியோங்கு தண்‌ திருவேங்கடம்‌ உடையாய்‌ உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும்‌ என்‌ உடைமையையும்‌ உன்‌ சக்கரப்‌ பொறி ஒற்றிக்‌ கொண்டு நின்‌ அருளே புரிந்திருந்தேன்‌ இனி என்‌ திருக்‌ குறிப்பே ()

464

பறவையேறு பரம்புருடா நீ என்னைக்‌ கைக்கொண்ட பின்‌ பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றிப்‌ பெரும்பதம்‌ ஆகின்றதால்‌ இறவு செய்யும்‌ பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால்‌ அறிவை என்னும்‌ அமுதவாறு தலைப்‌ பற்றி வாய்க்‌ கொண்டதே

465

எம்மனா என்‌ குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப்‌ பெற்ற நன்மை இவ்வுலகினில்‌ ஆர்‌ பெறுவார்‌ நம்மன்‌ போலே வீழ்த்தழுக்கும்‌ நாட்டிலுள்ள பாவம்‌ எல்லாம்‌ சும்மெனாதே கைவிட்டோடுத்‌ தூறுகள்‌ பாய்ந்தனவே

466

கடல்‌ கடைந்து அமுதம்‌ கொண்டு கலசத்தை நிறைத்தாற்‌ போல்‌ உடலுருகி வாய்‌ திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்‌ கொண்டேன்‌ கொடுமை செய்யும்‌ கூற்றமும்‌ என்‌ கோலாடி குறுகப்‌ பெறா தடவரைத்‌ தோள்‌ சக்கரபாணீ சார்ங்கவிற்‌ சேவகனே க

467

பொன்னைக்‌ கொண்டு உரைகல்‌ மீதே நிறமெழ உரைத்தாற்‌ போல்‌ உன்னைக்‌ கொண்டு என்‌ நாவகம்பால்‌ மாற்றின்றி உரைத்துக்‌ கொண்டேன்‌ உன்னைக்‌ கொண்டு என்னுள்‌ வைத்தேன்‌ என்னையும்‌ உன்னில்‌ இட்டேன்‌ என்னப்பா என்‌ இருடீகேசா என்னுயிர்க்‌ காவலனே

468

உன்னுடைய விக்கிரமம்‌ ஒன்றொழியாமல்‌ எல்லாம்‌ என்னுடைய நெஞ்சகம்‌ பால்‌ சுவர்‌ வழி எழுதிக்‌ கொண்டேன்‌ மன்னடங்க மழு வலங்கைக்‌ கொண்ட இராம நம்பீ என்னிடை வந்து எம்பெருமான்‌ இனி எங்குப்‌ போகின்றதே

469

பருப்பதத்துக்‌ கயல்‌ பொறித்த பாண்டியர்‌ குலபதி போல்‌ ர திருப்பொலிந்த சேவடி என்‌ சென்னியின்‌ மேல்‌ பொறித்தாய்‌ மருப்பொசித்தாய்‌ மல்லடர்த்தாய்‌ என்றென்று உன்‌ வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாகினையே

470

அனந்தன்‌ பாலும்‌ கருடன்‌ பாலும்‌ ஐது நொய்தாக வைத்து என்‌ மனம்‌ தனுள்ளே வந்து வைகி வாழச்‌ செய்தாய்‌ எம்பிரான்‌ நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்‌ கண்கள்‌ அசும்பொழுக நினைந்திருந்தே சிரமம்‌ தீர்ந்தேன்‌ நேமி நெடியவனே

471

பனிக்‌ கடலில்‌ பள்ளிகோளைப்‌ பழக விட்டு ஓடி வந்து என்‌ மனக்‌ கடலில்‌ வாழ வல்ல மாய மணாள நம்பீ தனிக்‌ கடலே தளிச்‌ சுடரே தனி உலகே என்றென்று உனக்கிடமாய்‌ இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே

472

தடவரைவாய்‌ மிளிர்ந்து மின்னும்‌ தவள நெடுங்கொடி போல்‌ சுடரொளியாய்‌ நெஞ்சினுள்ளே தோன்றும்‌ என்‌ சோதி நம்பி வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இஇடவகைகள்‌ இகழ்ந்திட்டு என்‌ பால்‌ இடவகை கொண்டனையே

473

வேயர்‌ தங்கள்‌ குலத்துதித்த விட்டுசித்தன்‌ மனத்தே கோயில்‌ கொண்ட கோவலனைக்‌ கொழுங்குளிர்‌ முகில்‌ வண்ணனை ஆயரேற்றை அமரர்‌ கோவை அந்தணர்‌ தம்‌ அமுதத்தினை சாயை போலப்‌ பாட வல்லார்‌ தாமும்‌ அணுக்கர்களே பெரியாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌