துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப்பறித்து புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்
5-3. துக்கச் சுழலையை
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"துக்கச் சுழலைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து, உள்ளே புகுந்து உன்னைக் கண்டுகொண்டேன்" — நெடுநாள் தேடலின் முடிவை ஆழ்வார் அறிவிக்கிறார். "இனிப் போக விடமாட்டேன்" என்ற உறுதி இப்பதிகம் முழுதும் ஒலிக்கிறது. வேண்டுதலின் குரல் மாறி, கண்டடைந்தவனின் குரல் இங்கே கேட்கத் தொடங்குகிறது.
பெரியாழ்வார் திருமொழி 5-3 துக்கச் சுழலையை (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேன் என்று தடுத்தல்)
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை ர் அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலை எந்தாய்
உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இஇனக்குறவர் புதியதுண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்
காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரில்லை உன் பாத நிழலல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய்சுற்றம் பேசிச் சென்று பேதஞ் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்
காலுமெழா கண்ணனீரும் நில்லா உடல் சோர்ந்து நடூங்கி குரல் மேலுமெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ்வொழியா மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய்
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்தறிவாரும் இல்லை மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா மறு பிறவி தவிரத் திருத்தி உன் கோயிற் கடைப் புகப்பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்
அக்கரை என்னுமனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சலென்று கைகலியாய் ர சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக ஆடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளையென்றே இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன் மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய்
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யல் உற்றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடூவதுண்டே ர சென்றங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய் ர் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன் ஒன்றினோடொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே