Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

5-2. நெய்க்குடத்தை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் உடலைச் சூழ்ந்து நிற்கும் நோய்களை ஆழ்வார் நேரடியாக விளிக்கிறார். "காலம் இருக்கும்போதே விலகிச் செல்லுங்கள்" என்று அவற்றிடமே சொல்கிறார். முதுமையையும் நோயையும் எதிரிகளாகக் காட்டாமல், பேசி அனுப்பக்கூடியவையாகக் கையாளும் விதம் தனித்துவமானது. உடல் தளர்வதற்குள் மனத்தைச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதே கருத்து.

பெரியாழ்வார்‌ திருமொழி 5-2 நெய்க்குடத்தை (தம்மிடத்து எம்பெருமான்‌ திருப்பதிகளிற்‌ போலே விரும்பிப்‌ புகுந்ததனால்‌ நோய்களை அகலும்படி ஆழ்வார்‌ கூறுதல்‌)

443

நெய்க்குடத்தைப்‌ பற்றி ஏறும்‌ எறும்புகள்‌ போல்‌ நிரந்து எங்கும்‌ கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்‌ காலம்‌ பெற உய்யப்‌ போமின்‌ மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்‌ பிரானார்‌ கிடந்தார்‌ பைக்‌ கொண்ட பாம்பணையோடும்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

444

சித்திரகுத்தன்‌ எழுத்தால்‌ தென்புலக்கோன்‌ பொறியொற்றி வைத்த இலச்சினை மாற்றித்‌ தூதுவர்‌ ஓடி ஒளித்தார்‌ முத்துத்‌ திரைக்‌ கடற்‌ சேர்ப்பன்‌ மூதறிவாளர்‌ முதல்வன்‌ பத்தர்க்கமுதன்‌ அடியேன்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

445

வயிற்றில்‌ தொழுவைப்‌ பிரித்து வன்புலச்‌ சேவையதக்கி கயிற்றும்‌ அக்காணி கழித்துக்‌ காலிடைப்‌ பாசம்‌ கழற்றி எயிற்றிடை மண்‌ கொண்ட எந்தை இராப்பகல்‌ ஓதுவித்து என்னைப்‌ பயிற்றிப்‌ பணி செய்யக்‌ கொண்டான்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

446

மங்கிய வல்வினை நோய்காள்‌ உமக்கும்‌ ஓர்‌ வல்வினை கண்டீர்‌ இங்குப்‌ புகேன்மின்‌ புகேன்மின்‌ எளிதன்று கண்டீர்‌ புகேன்மின்‌ சிங்கப்‌ பிரானவன்‌ எம்மான்‌ சேரும்‌ திருக்கோயில்‌ கண்டீர்‌ பங்கப்படாது உய்யப்‌ போமின்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

447

மாணிக்குறள்‌ உருவாய மாயனை என்‌ மனத்துள்ளே பேணிக்‌ கொணர்ந்து புகுத வைத்துக்‌ கொண்டேன்‌ பிறிதின்றி மாணிக்கப்‌ பண்டாரம்‌ கண்டீர்‌ வலிவன்‌ குறும்பர்கள்‌ உள்ளீர்‌ பாணிக்க வேண்டா நடமின்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

448

உற்றவுறு பிணி நோய்காள்‌ உமக்கு ஒன்று சொல்லுகேன்‌ கேண்மின்‌ பெற்றங்கள்‌ மேய்க்கும்‌ பிரானார்‌ பேணும்‌ திருக்கோயில்‌ கண்டீர்‌ ர அற்றம்‌ உரைக்கின்றேன்‌ இன்னம்‌ ஆழ்வினைகாள்‌ உமக்கு இங்கு ஓர்‌ பற்றில்லை கண்டீர்‌ நடமின்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

449

கொங்கைச்‌ சிறுவரை என்னும்‌ பொதும்பினில்‌ வீழ்ந்து வழுக்கி அங்கோர்‌ முழையினில்‌ புக்கிட்டு அழுந்திக்‌ கிடந்துழல்வேனை வங்கக்‌ கடல்வண்ணன்‌ அம்மான்‌ வல்வினையாயின மாற்றி பங்கப்‌ படாவண்ணம்‌ செய்தான்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

450

ஏதங்கள்‌ ஆயினவெல்லாம்‌ இறங்கல்‌ இடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்‌ பிரானார்‌ பிரம குருவாகி வந்து போதில்‌ கமல வன்னெஞ்சம்‌ புஜஉந்தும்‌ என்‌ சென்னித்திடரில்‌ பாதவிலச்சினை வைத்தார்‌ பண்டன்று பட்டினம்‌ காப்பே

451

உறகல்‌ உறகல்‌ உறகல்‌ ஒண்சுடர்‌ ஆழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாமல்‌ இருந்த எண்மர்‌ உலோகபாலீர்காள்‌ பறவையரையா உறகல்‌ பள்ளியறை குறிக்‌ கொண்மின்‌

452

அரவத்தமளியினோடும்‌ அழகிய பாற்கடலோடும்‌ அரவிந்தப்‌ பாவையும்‌ தானும்‌ அகம்படி வந்து புகுந்து பரவைத்‌ திரை பல மோதப்‌ பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான்‌ விட்டுசித்தன்‌ பட்டினம்‌ காவற்‌ பொருட்டே