Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

5-1. வாக்குத் தூய்மை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"நாவின் தூய்மை இல்லாமையால் உன்னை வாயால் சொல்லத் தகுதியற்றவன் நான்" என்று ஆழ்வார் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். அதே மூச்சில், "என் நாக்கு உன்னையன்றி வேறொன்றை அறியாது" என்றும் சொல்கிறார். தகுதியின்மையை ஒப்புக்கொள்வதும், அன்பை மறுக்க முடியாததும் ஒரே இடத்தில் நிற்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான படபடப்பே இப்பதிகத்தின் உயிர்.

பெரியாழ்வார்‌ திருமொழி 5-1 வாக்குத்‌ தூய்மை (நைச்யாநுசந்தானம்‌)

433

வாக்குத்‌ தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்‌ கொள்ள மாட்டேன்‌ நாக்கு நின்னை அல்லால்‌ அறியாது நானதஞ்சுவன்‌ என்‌ வசம்‌ அன்று மூர்க்குப்‌ பேசுகின்றான்‌ இவனென்று முனிவாயேலும்‌ என்‌ நாவினுக்கு ஆற்றேன்‌ காக்கை வாயிலும்‌ கட்டூரை கொள்வர்‌ காரணா கருளக்‌ கொடியானே

434

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்‌ சங்கு சக்கரம்‌ ஏந்து கையனே பிழைப்பராகிலும்‌ தம்மடியார்‌ சொல்‌ பொறுப்பது பெரியோர்‌ கடனன்றே விழிக்கும்‌ கண்ணிலேன்‌ நின்கண்‌ மற்றல்லால்‌ வேறொருவரோடு என்‌ மனம்‌ பற்றாது உழைக்கு ஓர்‌ புள்ளி மிகையன்று கண்டாய்‌ ஊழி ஏழுலகுண்டுமிழ்ந்தானே

435

நன்மை தீமைகள்‌ ஒன்றும்‌ அறியேன்‌ நாரணா என்னும்‌ இத்தனை அல்லால்‌ புன்மையால்‌ உன்னைப்‌ புள்ளுவம்‌ பேசிப்‌ புகழ்வானன்று கண்டாய்‌ திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும்‌ அறியேன்‌ ஓவாதே நமோ நாரணா என்பன்‌ வன்மையாவது உன்‌ கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவன்‌ என்னும்‌ வன்மை கண்டாயே

436

நெடுமையால்‌ உலகேழமும்‌ அளந்தாய்‌ நின்மலா நெடியாய்‌ அடியேனைக்‌ குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவதில்லை அடிமை என்னும்‌ அக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும்‌ கண்டாய்‌ கொடுமைக்‌ கஞ்சனைக்‌ கொன்று நின்‌ தாதை கோத்தவன்‌ தளைகோள்‌ விடூுத்தானே க

437

தோட்டம்‌ இல்லவள்‌ ஆத்தொழு ஓடை துடவையும்‌ கிணறும்‌ இவை எல்லாம்‌ வாட்டமின்றி உன்‌ பொன்னடிக்‌ கீழே வளைப்பகம்‌ வகுத்துக்‌ கொண்டிருந்தேன்‌ நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார்‌ பலர்‌ கேழல்‌ ஒன்றாகி கோட்டுமண்‌ கொண்ட கொள்கையினானே குஞ்சரம்‌ வீழக்‌ கொம்பொசித்தானே

438

கண்ணா நான்முகனைப்‌ படைத்தானே காரணா கரியாய்‌ அடியேன்‌ நான்‌ உண்ணா நாள்‌ பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்‌ இருக்கெசுச்‌ சாம வேத நாண்மலர்‌ கொண்டு உன பாதம்‌ நண்ணா நாள்‌ அவை தத்துறுமாகில்‌ அன்று எனக்கு அவை பட்டினி நாளே

439

வெள்ளை வெள்ளத்தின்‌ மேல்‌ ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்‌ மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்‌ காணலாங்கொல்‌ என்றாசையினாலே உள்ளம்‌ சோர உகந்தெதிர்‌ விம்மி உரோம கூபங்களாய்‌ கண்ண நீர்கள்‌ துள்ளம்‌ சோரத்‌ துயிலணை கொள்ளேன்‌ சொல்லாய்‌ யான்‌ உன்னைத்‌ தத்துறுமாறே

440

வண்ணமால்‌ வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா கண்ணனே கரிகோள்‌ விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணுவார்‌ இடரைக்‌ களைவானே ஏத்தரும்‌ பெருங்க்‌ கீர்த்தியினானே நண்ணி நான்‌ உன்னை நாள்தொறும்‌ ஏத்தும்‌ நன்மையே அருள்‌ செய்‌ எம்பிரானே

441

நம்பனே நவின்றேத்த வல்லார்கள்‌ நாதனே நரசிங்கம்‌ அதானாய்‌ உம்பர்‌ கோன்‌ உலகேழும்‌ அளந்தாய்‌ ஊழியாயினாய்‌ ஆழி முன்னேந்தி கம்பமா கரிகோள்‌ விடுத்தானே காரணா கடலைக்‌ கடைந்தானே எம்பிரான்‌ என்னை ஆளுடைத்தேனே ஏழையேன்‌ இடரைக்‌ களையாயே

442

காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காண இனிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌ என்‌ மரகத வண்ணன்‌ மாதவன்‌ மதுசூதனன்‌ தன்னை சேமநன்கமரும்‌ புதுவையர்‌ கோன்‌ விட்டுசித்தன்‌ வியன்‌ தமிழ்‌ பத்தும்‌ நாமமென்று நவின்றுரைப்பார்கள்‌ நண்ணுவார்‌ ஒல்லை நாரணனுலகே