Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-9. மரவடியை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

திருவடி நிலைகளைத் தம்பியிடம் பணையமாக வைத்துவிட்டுக் காடு சென்ற இராமனைப் பாடும் பதிகம். வானோர் வாழத் திசைகளின் கருமத்தைத் திருத்தி, பின் திரும்பி வந்து உலகாண்டவனை நினைவுகூர்கிறார். கொடுத்த சொல்லைக் காப்பதற்காக அரசையே விட்டுச் சென்றவனின் நேர்மை இப்பதிகத்தின் மையம். சென்ற இடத்திலும் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டே திரும்பினான் என்பது கூடுதல் சிறப்பு.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-9 மரவடியை (திருவரங்கம்‌ பெரியகோயிலின்‌ பெருமை 2)

412

மரவடியைத்‌ தம்பிக்கு வான்பணையம்‌ வைத்துப்‌ போய்‌ வானோர்‌ வாழ செருவுடைய திசைக்‌ கருமம்‌ திருத்தி வந்து உலகாண்ட திருமால்‌ கோயில்‌ ர திருவடிதன்‌ திருவுருவும்‌ திருமங்கை மலர்கண்ணும்‌ காட்டி நின்று உருவுடைய மலர்‌ நீலம்‌ காற்றாட்ட ஓசலிக்கும்‌ ஒளி அரங்கமே

413

தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ ர தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அது செய்யார்‌ செய்தாரேல்‌ னன்று செய்தார்‌ என்பர்‌ போலும்‌ மன்னுடைய விபீடணற்கா மதிள்‌ இலங்கைத்‌ திசை நோக்கி மலர்கண்‌ வைத்த என்னுடைய திருவரங்கற்கன்றியும்‌ மற்றொருவர்க்கு ஆளாவரே

414

கருளுடைய பொழில்‌ மருதும்‌ கதக்களிறும்‌ பிலம்பனையும்‌ கடிய மாவும்‌ உருளுடைய சகடரையும்‌ மல்லரையும்‌ உடைய விட்டு ஓசை கேட்டான்‌ இருள்‌ அகற்றும்‌ எறிகதிரோன்‌ மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள்‌ கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்‌ அமருமூர்‌ அணியரங்கமே

415

பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணி செய்ய துவரை என்னும்‌ அதில்‌ நாயகராகி வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ புது நாண்மலர்க்‌ கமலம்‌ எம்பெருமான்‌ பொன்வயிற்றில்‌ பூவே போல்வான்‌ பொது நாயகம்‌ பாவித்து இருமாந்து பொன்‌ சாய்க்கும்‌ புனல்‌ அரங்கமே

416

ஆமையாய்க்‌ கங்கையாய்‌ ஆழ்கடலாய்‌ அவனியாய்‌ அருவரைகளாய்‌ நான்முகனாய்‌ நான்மறையாய்‌ வேள்வியாய்த்‌ தக்கணையாய்த்‌ தானுமானான்‌ சேமமுடை நாரதனார்‌ சென்று சென்று துதித்திறைஞ்சக்‌ கிடந்தான்‌ கோயில்‌ பூமருவிப்‌ புள்ளினங்கள்‌ புள்ளரையன்‌ புகழ்‌ குழறும்‌ புனல்‌ அரங்கமே

417

மைத்துனன்மார்‌ காதலியை மயிர்‌ முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன்‌ சிறுவனையும்‌ உய்யக்‌ கொண்ட உயிராளன்‌ உறையும்‌ கோயில்‌ பத்தர்களும்‌ பகவர்களும்‌ பழமொழி வாய்‌ முனிவர்களும்‌ பரந்த நாடும்‌ சித்தர்களும்‌ தொழுதிறைஞ்சத்‌ திசை விளக்காய்‌ நிற்கின்ற திருவரங்கமே

418

குறட்‌ பிரமசாரியாய்‌ மாவலியைக்‌ குறும்பதக்கி அரசு வாங்கி இறைப்‌ பொழிதில்‌ பாதாளம்‌ கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான்‌ கோயில்‌ எறிப்புடைய மணிவரை மேல்‌ இளஞாயிறு எழுந்தாற்போல்‌ அரவணையின்‌ வாய்‌ சிறப்புடைய பணங்கள்‌ மிசைச்‌ செழுமணிகள்‌ விட்டெறிக்கும்‌ திருவரங்கமே

419

உரம்‌ பற்றி இரணியனை உகிர்நுதியால்‌ ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி சிரம்‌ பற்றி முடியிடியக்‌ கண்‌ பிதுங்க வாயலரத்‌ தெழித்தான்‌ கோயில்‌ உரம்‌ பெற்ற மலர்க்‌ கமலம்‌ உலகளந்த சேவடிபோல்‌ உயர்ந்து காட்ட வரம்புற்ற கதிர்ச்‌ செந்நெல்‌ தாள்‌ சாய்த்துத்‌ தலை வணக்கும்‌ தண்ணரங்கமே

420

தேவுடைய மீனமாய்‌ ஆமையாய்‌ ஏனமாய்‌ அரியாய்க்‌ குறளாய்‌ மூவுருவின்‌ இராமனாய்க்‌ கண்ணனாய்க்‌ கற்கியாய்‌ முடிப்பான்‌ கோயில்‌ சேவலொடு பெடை அன்னம்‌ செங்கமல மலரேறி ஊசலாடி பூவணைமேல்‌ துதைந்தெழு செம்பொடுயாடி விளையாடும்‌ புனல்‌ அரங்கமே

421

செருவாளும்‌ புள்ளாளன்‌ மண்ணாளன்‌ செருச்செய்யும்‌ நாந்தகம்‌ என்னும்‌ ஒருவாளன்‌ மறையாளன்‌ ஓடாத படையாளன்‌ விழுக்கையாளன்‌ இரவாளன்‌ பகலாளன்‌ என்னையாளன்‌ ஏழுலகப்‌ பெரும்‌ புரவாளன்‌ திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கமே

422

கைந்நாகத்திடர்‌ கடிந்த கனலாழிப்‌ படையுடையான்‌ கருதும்‌ கோயில்‌ தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதியின்‌ மேல்‌ மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌ விரித்த தமிழ்‌ உரைக்க வல்லார்‌ எஞ்ஞான்றும்‌ எம்பெருமான்‌ இணையடிக்‌ கீழ்‌ இணை பிரியாதிருப்பர்‌ தாமே