மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை ஓதுவித்ததக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்கம் என்பதுவே
4-8. மாதவத்தோன்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
பெருந்தவம் செய்தவனின் மகன் கடலில் மாண்டபோது, ஓதுவித்த ஆசிரியனுக்குத் தட்சிணையாக அவனை உருவோடு மீட்டுத் தந்தவனின் ஊரைப் பாடும் பதிகம். கற்றுக்கொடுத்தவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க, இறந்தவனையே திரும்பக் கொணர்ந்தான் என்கிறார். மாணவனாக இருந்தபோதும் அவன் இறைவனாகவே இருந்தான் என்பதை இக்கதை காட்டுகிறது.
பெரியாழ்வார் திருமொழி 4-8 மாதவத்தோன் (திருவரங்கம் பெரிய கோயிலின் பெருமை 1)
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர் மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே
மருமகன் தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை பொருமுகமாய் நின்றலரும் புனல் அரங்கம் என்பதுவே
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடுயவள் வாய்க் கடிய சொல் கேட்டு ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் தேன் தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்கம் என்பதுவே (க)
பெருவரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடூத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழை மடலூடூரிஞ்சித் தவள வண்ணப் பொடு அணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம் படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரை வாய் ஈர்த்துக் கொண்டு தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் எல்லியம்போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே
குன்றாடு கொழுமுகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல் நின்றாடு கணமயில் போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலையணவி மன்றூடு தென்றலுமாம் மதிள் அரங்கம் என்பதுவே
பருவரங்கள் அவை பற்றிப் படையாலித்தெழுந்தானை செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே