Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-7. தங்கையை மூக்கும்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

தங்கையின் மூக்கையும் தமையனின் தலையையும் தடிந்த தாசரதியின் புகழைப் பாடும் பதிகம். சூர்ப்பணகைக்கும் இராவணனுக்கும் நேர்ந்ததைச் சொல்லி, பின் எங்கும் தன் புகழ் நிறைய அரசாண்ட புருடோத்தமனை நினைவுகூர்கிறார். தண்டிப்பதிலும் ஆள்வதிலும் ஒரே நீதி காக்கும் அரசனாக இராமன் இங்கே காட்டப்படுகிறார்.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-7 தங்கையை மூக்கும்‌ (தேவப்ரயாகை என்று வழங்கும்‌ கண்டமென்னும்‌ திருப்பதியின்‌ பெருமை)

391

தங்கையை மூக்கும்‌ தமையனைத்‌ தலையும்‌ தடிந்த எம்‌ தாசரதி போய்‌ எங்கும்‌ தன்‌ புகழாவிருந்து அரசாண்ட எம்‌ புருடோத்தமன்‌ இருக்கை கங்கை கங்கையென்ற வாசகத்தாலே கடூவினை களைந்திடூதிற்கும்‌ கங்கையின்‌ கரை மேல்‌ கைதொழ நின்ற கண்டமென்னும்‌ கடிநகரே

392

சலம்பொதியூடம்பின்‌ தழலுமிழ்‌ பேழ்வாய்ச்‌ சந்திரன்‌ வெங்கதிர்‌ அஞ்ச மலர்ந்தெழுந்தணவு மணிவண்ண உருவின்‌ மால்புருடோத்தமன்‌ வாழ்வு வ நலம்‌ திகழ்‌ சடையான்‌ முடிக்‌ கொன்றை மலரும்‌ நாரணன்‌ பாதத்‌ துழாயும்‌ கலந்திழி புனலால்‌ புகர்‌ படு கங்கைக்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

393

அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ்‌ ஆழி கொண்டெறிந்து அங்கு எதிர்முகவசுரர்‌ தலைகளை இடறும்‌ எம்‌ புருடோத்தமன்‌ இருக்கை சதுமுகன்‌ கையில்‌ சதுப்புயன்‌ தாளில்‌ சங்கரன்‌ சடையினில்‌ தங்கி கதிர்முகமகணி கொண்டுழி புனல்‌ கங்கைக்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

394

இமையவர்‌ இறுமாந்திருந்தரசாள ஏற்று வந்தெதிர்‌ பொரு சேனை ர்‌ | நமபுரம்‌ நணுக நாந்தகம்‌ விசிறும்‌ நம்‌ புருடோத்தமன்‌ நகர்‌ தான்‌ இமவந்தம்‌ தொடங்கி இருங்கடல்‌ அளவும்‌ இருகரை உலகிரைத்தாட கமையுடைப்‌ பெருமைக்‌ கங்கையின்‌ கரை மேல்‌ கண்டமென்னும்‌ கடிநகரே .

395

உழுவதோர்‌ படையும்‌ உலக்கையும்‌ வில்லும்‌ ஒண்சுடர்‌ ஆழியும்‌ சங்கும்‌ மழுவொடு வாளும்‌ படைக்கலம்‌ உடைய மால்‌ புருடோத்தமன்‌ வாழ்வு வ எழுமையும்‌ கூடி ஈண்டிய பாவம்‌ இறைப்பொழுதளவினில்‌ எல்லாம்‌ | கழுவிடும்‌ பெருமைக்‌ கங்கையின்‌ கரை மேல்‌ கண்டமென்னும்‌ | கடிநகரே

396

தலைப்பெய்து குமுறிச்சலம்பொதி மேகம்‌ சலசல பொழிந்திடக்‌ கண்டு மலைப்பெரும்‌ குடையால்‌ மறுத்தவன்‌ மதுரை மால்‌ புருடோத்தமன்‌ வாழ்வு அலைப்புடைத்‌ திரை வாய்‌ அருந்தவ முனிவர்‌ அவபிரதம்‌ குடைந்தாட கலப்பைகள்‌ கொழிக்கும்‌ கங்கையின்‌ கரை மேல்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

397

விற்பிடித்திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன்‌ தலை சாடி மற்பொருதெழப்‌ பாய்ந்து அரையன உதைத்த மால்‌ புருடோத்தமன்‌ வாழ்வு அற்புதமுடைய அயிராவத மதமும்‌ அவரிளம்படியர்‌ ஒண்சாந்தும்‌ | கற்பக மலரும்‌ கலந்திழி கங்கைக்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

398

திரை பொருகடல்‌ சூழ்‌ திண்‌ மதிள்‌ துவரை வேந்து தன்‌ மைத்துனன்மார்க்காய்‌ அரசினை அவிய அரசினை அருளும்‌ அரி புருடோத்தமன்‌ அமர்வு 9 நிரை நிரையாக நெடியனயூபம்‌ நிரந்தரம்‌ ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப்‌ புகை கமழ்‌ கங்கை கண்டமென்னும்‌ கடிநகரே

399

வடதிசை மதுரை சாளக்கிராமம்‌ வைகுந்தம்‌ துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம்‌ புருடோத்தமன்‌ இருக்கை தடவரை அதிரத்‌ தரணி விண்டிடியத்‌ தலைப்‌ பற்றிக்‌ கரை மரம்‌ சாடி கடலினைக்‌ கலங்கக்‌ கடுத்திழி கங்கைக்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

400

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்‌ மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம்‌ நன்குடைய எம்‌ புருடோத்தமன்‌ இருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில்‌ தோன்றி மூன்றினில்‌ மூன்றுருவானான்‌ கான்‌ தடம்‌ பொழில்‌ சூழ்‌ கங்கையின்‌ கரை மேல்‌ கண்டமென்னும்‌ கடிநகரே

401

பொங்கொலி கங்கைக்‌ கரைமலி கண்டத்து உறை புருடோத்தமன்‌ அடி மேல்‌ வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்‌ கோன்‌ விட்டுசித்தன்‌ விருப்புற்று தங்கிய அன்பால்‌ செய்‌ தமிழ்‌ மாலை தங்கிய நாவுடையார்க்கு கங்கையில்‌ திருமால்‌ கழலிணைக்‌ கீழே குளித்திருந்த கணக்காமே