காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங்கவத்தப் பேரிடம் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்திருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
4-6. காசுங்கறையுடை
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"ஒரு காசுக்கும் கறையுடைய கூறைக்கும் ஆசைப்பட்டு அவத்தமான இடங்களுக்குச் செல்கிறீர்களே" என்று ஆழ்வார் கடிந்து கொள்கிறார். அற்பப் பயனுக்காக அலையும் நேரத்தில் கேசவனின் திருநாமத்தைச் சொல்லுங்கள் என்கிறார். செலவே இல்லாத, யாரும் தடுக்க முடியாத ஒன்று திருநாமம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறார். எளிய வழி கையில் இருக்கும்போது கடினமான வழியில் ஏன் அலைகிறோம் என்பதே கேள்வி.
பெரியாழ்வார் திருமொழி 4-6 காசுங்கறையுடை (பெற்ற பிள்ளைகளுக்குப் பரம புருவனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம் திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
அங்கொரு கூறை அரைக் குடூுப்பதன் ஆசையால் மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் செங்கணெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நானுடை நாரணன் தம் அன்னை நரகம்புகாள் க
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை மலமுடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலமுடை நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடியழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு எண்ணமொன்றின்றி இருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம்பெருந்தாமரைக் கண்ணன் பேரிட்டழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில்வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணாலமாடுத் திரிமினோ நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
சீரணிமால் திருநாமமே இடத்தேற்றிய வீரணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த ஓரணி ஒண்தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர் பேரணி வைகுந்தத்து என்றும் பேணியிருப்பரே