திருவாய்மொழி 10-3 வேய்மருதோள்
10-3. வேய்மருதோள்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"...ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ!" — நிரை மேய்க்கச் செல்லும் கண்ணனைப் பிரிந்த ஒரு பகற்பொழுதே ஆயிரம் ஊழியாய்த் தோன்றுகிறது என்னும் ஆயர்மகளின் புலம்பல் பதிகம். மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தனிமையையும் மெலிவையும் நோக்காது குயில்கள் கூவ — ஒருநாள் பிரிவும் தாங்கவொண்ணாத துயர். காலம் பிரிவால் நீளும் நிலை இதில் அளக்கப்படுகிறது.
வேய்மரு தோளிணை மெலியுமாலோ! மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா காமரு குயில்களும் கூவுமாலோ! கணமயில் அவை கலந்தாலுமாலோ! ஆமருவினநிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ! தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ! தகவிலை தகவிலையே நீ கண்ணா!
தகவிலை தகவிலையே நீ கண்ணா! தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கியாங்கே அகவுயிர் அகமகந்தோறும் உள்புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ! மிக மிக இனி உன்னைப் பிரிவையாமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே
விவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால் யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் போவதன்று ஒரு பகல் நீ அகன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா சாவது இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத்தொழுத்தையோம் தனிமை தானே
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா! நின் தொழுத்தனிற் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி பழுத்த நல்லமுதின் இன்சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகந்தோறும் உள்புக்கு அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா! பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின்றாலோ!!! சச மணிமிகு மார்வினின் முல்லைப் போது என் வனமுலை கமழ்வித்து உன் வாயமுதம் தந்து அணிமிகு தாமரைக் கையை அந்தோ! அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழியங்கண்ணா! உன் கோலப் பாதம் பிடித்தது நடு உனக்கு அரிவையரும்' பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் வடித்தடங்கண்ணிணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே வெமுப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கே
வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கு வெள்வளை மேகலை கழன்று வீழ தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் துணைமுலை பயந்து என தோள்கள் வாட மாமணி வண்ணா! உன் செங்கமல வண்ண மென்மலரடி நோவ நீ போய் ஆமகிழ்ந்துகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கே?
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கென்று ஆழமும் என் ஆருயிர் ஆன்பின் போகேல் கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல் வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி ஒசிசெய் நுண்ணிடை இளவாய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழி தராயே
உகக்கு நல்லவரொடும் உழி தந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான்! பசு மேய்க்கப் போகேல் ர மிகப் பல அசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொற்கொள் அந்தோ!
அவத்தங்கள் விளையும் என் சொற்கொள் அந்தோ! அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும் உவர்த்தலை உடன் திரிகிலையும் என்றென்று ஊடுற என்னுடை ஆவி வேமால் திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே!
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல் சங்கணி துறைவன் வண்தென்குருகூர் வண்சடகோபன் சொல் ஆயிரத்துள் மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் அங்கவன் பசு நிரை மேய்ப்பொழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே