திருவாய்மொழி 10-1 தாள தாமரை
10-1. தாள தாமரை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"...காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே" — திருமோகூரில் நிலைபெற்று அசுரரை அழிக்கும் காளமேக வண்ணனைத் தவிர வேறு கதி நமக்கு இல்லை என்று உறுதிப்படுத்தும் பதிகம். ஏகபுகல் — அவனொருவனே சரண் என்னும் அனன்யகதித்துவம் இதன் கருத்து. பத்தாம் பத்து இந்த ஒற்றைச் சரணுணர்வுடன் தொடங்குகிறது.
தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய் காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே 1 ' ஆயிரத்து 3? இது சில தேசங்களில் கோவில் திருவாய்மொழி
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை அம்மான் நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலங்கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே
அன்றி யாம் ஒரு புகல் இடம் இலம் என்றென்று அலற்றி நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்று இம்மூவுலகளித்து உழல்வான் திருமோகூர் நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே
இடர் கெட எம்மைப் போந்தளியாய் என்றென்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே
தொண்டீர்! வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூவுலகளந்தவன் அணி திருமோகூர் எண்டிசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய கொண்ட கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண்பணை வள வயல் சூழ் திருமோகூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே
மற்றிலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல்முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின் உயர் கொள் சோலை ஒண் தட மணி ஒளி திருமோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரதக மணித் தடத்தினையே
மணித் தடத்தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள் நால் தடந்தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திருமோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே
நாம் அடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் காம ரூபம் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!
ஏத்துமின் நமர்காள்! என்று தான் குடமாடு கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்! வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே