திருவாய்மொழி 9-5 இன்னுயிர்ச்சேவல்
9-5. இன்னுயிர்ச்சேவல்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்!" — பிரிவுத் துயரில் வாடும் தலைவி, சேவலோடு கூவும் குயில்களை நோக்கி, என் உயிர் நோகுமாறு கூவாதீர் என்று கடிகிறாள். கண்ணனை வரக் கூவாத நீங்கள் என் உயிரையே கூவிக் கொண்டு போகிறீர்களே என்பது அவள் புலம்பல். இயற்கையே பிரிவில் துன்பம் தரும் எதிரியாய் மாறுகிறது.
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்! என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?
இத்தனை வேண்டூவதன்று அந்தோ! அன்றில் பேடைகாள்! எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர் வித்தகன் கோவிந்தன் மெய்யனல்லன் ஒருவர்க்கும் அத்தனையாம் இனி என்னுயிர் அவன் கையதே
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள்! எவம்!' சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே ர தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ? எவன் சொல்லி நிற்றும்? நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் மேற்கிளை கொள்ளேல்மின் நீரும் சேவலும்! கோழிகாள்! ர் வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்றுழலுமே
அந்தரம் நின்றுழல்கின்ற யானுடைப் பூவைகாள்! நும் திரத்தேதும் இடையில்லை குழறேன்மினோ இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகும் கொண்ட நம் திருமார்பன் நம்மாவி உண்ண நன்கெண்ணினான்
நன்கெண்ணி நான் வளர்த்த சிறுகிளிப் பைதலே! இன்குரல் நீ மிழற்றேல் என்னாருயிர்க் காகுத்தன் நின் செய்ய வாயொக்கும் வாயன் கண்ணன் கைகாலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டூண்டு நீங்கினான் 6 ! எவன்
கூட்டூண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய் வாட்டமில் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்! காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கு அது காலனே
உயிர்க்கது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் குயிற்பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் தயிர்ப் பழஞ்சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல்வளம் ஊட்டினீர் பண்புடையீரே!
பண்புடை! வண்டொடு தும்பிகாள்! பண் மிழற்றேன்மின் புண்புரை வெல்கொடு குத்தாலொக்கும் நும் இன்குரல் தண்பெருநீர்த் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் நம்மாவி உண்டெழ நண்ணினான்
எழ நண்ணி நாமும் நம் வானனாடனோடு ஒன்றினோம் பழன நன்னாரைக் குழாங்கள்காள்! பயின்றென் இனி? இழை நல்லவாக்கையும் பையவே புயக்கற்றது தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு தண் புகழ் ஏத்தத் தனக்கருள் செய்த மாயனை தென்குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே