Skip to the text
திருவாய்மொழி

9-3. ஓராயிரம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஓராயிரமாய் உலகேழ் அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் ... நாராயணன் நங்கள் பிரான் அவனே" — ஆயிரமாய் விரிந்து ஏழுலகையும் காக்கும், ஆயிரம் திருநாமம் தாங்கிய பெருமையவன் நாராயணனே நம் பிரான் என்று உறுதிப்படுத்தும் பதிகம். பல திருநாமங்களும் பல வடிவங்களும் இறுதியில் ஒரே நாராயணனிடம் ஒடுங்குகின்றன. இப்பத்தை ஓதவல்லார் வைகுந்தம் ஏறுதல் இயல்பு என்று முடிக்கிறது.

திருவாய்மொழி 9-3 ஓராயிரம்‌

3579

ஓராயிரமாய்‌ உலகேழ்‌ அளிக்கும்‌ பேராயிரம்‌ கொண்டதோர்‌ பீடூடையன்‌ ர காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ நங்கள்‌ பிரான்‌ அவனே

3580

அவனே அகல்ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃது உண்டுமிழ்ந்தான்‌ அளந்தான்‌ அவனே அவனும்‌ அவனும்‌ அவனும்‌ அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே

3581

அறிந்தன வேத அரும்பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும்பொருள்‌ ஆதல்‌ அறிந்தனர்‌ எல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்கள்‌ அறுக்கும்‌ மருந்தே

3582

மருந்தே நங்கள்‌ போக மகிழ்ச்சிக்கு என்று பெருந்தேவர்‌ குழாங்கள்‌ பிதற்றும்‌ பிரான்‌ கருந்தேவன்‌ எம்மான்‌ கண்ணன்‌ விண்ணுலகம்‌ தரும்‌ தேவனைச்‌ சோரேல்‌ கண்டாய்‌ மனமே!

3583

மனமே! உன்னை வல்வினையேன்‌ இரந்து கனமே சொல்லினேன்‌ இது சோரேல்‌ கண்டாய்‌ புனம்‌ மேவிய பூந்தண்துழாய்‌ அலங்கல்‌ இனமேதும்‌ இலானை அடைவதுமே

3584

அடைவதும்‌ அணியார்‌ மலர்மங்கை தோள்‌ மிடைவதும்‌ அசுரர்க்கு வெம்போர்களே கடைவதும்‌ கடலுள்‌ அமுதம்‌ என்‌ மனம்‌ உடைவதும்‌ அவற்கே ஒருங்காகவே

3585

ஆகம்‌ சேர்‌ நரசிங்கம்‌ அதாகி ஓர்‌ ஆகம்‌ வள்ளுகிரால்‌ பிளந்தானுறை மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என்‌ மனம்‌ ஏகம்‌ எண்ணும்‌ இராப்பகல்‌ இன்றியே

3586

இன்றிப்‌ போக இருவினையும்‌ கெடுத்து ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்‌ கொள்வான்‌ நின்ற வேங்கடம்‌ நீள்நிலத்து உள்ளது சென்று தேவர்கள்‌ கைதொழுவார்களே

3587

தொழுது மாமலர்‌ நீர்‌ சுடர்‌ தூபம்‌ கொண்டு எழுதும்‌ என்னும்‌ இது மிகையாதலில்‌ பழுதில்‌ தொல்புகழ்ப்‌ பாம்பணைப்‌ பள்ளியாய்‌! தழுவுமாறு அறியேன்‌ உன தாள்களே

3588

தாள தாமரையான்‌ உனதுந்தியான்‌ வாள்கொள்‌ நீள்மழுவாளி உன்னாகத்தான்‌ ஆளராய்த்‌ தொழுவாரும்‌ அமரர்கள்‌ நாளும்‌ என்‌ புகழ்கோ உன சீலமே?

3589

சீலம்‌ எல்லையிலான்‌ அடி மேல்‌ அணி கோல நீள்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ மாலை ஆயிரத்துள்‌ இவை பத்தினின்‌ பாலர்‌ வைகுந்தம்‌ ஏறுதல்‌ பான்மையே