Skip to the text
திருவாய்மொழி

8-9. கருமாணிக்கம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கருமாணிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போல்" — கரிய மாணிக்க மலையின் மேல் தாமரைக் காடுகள் பூத்தாற்போல, அவனுடைய திருமார்பும் வாயும் கண்களும் கைகளும் விளங்குகின்றன என்று சொல்லும் பதிகம். ஒரே உருவகத்தை நூல் முழுவதும் விரித்துச் செல்லும் திறன் இங்கே வெளிப்படுகிறது. கருமையின் மேல் சிவப்பு — இதுவே அவனுடைய நிறத்திட்டம்.

திருவாய்மொழி 8-9 கருமாணிக்கம்‌

3535

கருமாணிக்க மலை மேல்‌ மணித்தடம்‌ தாமரைக்‌ காடுகள்‌ போல்‌ திருமார்வு வாய்‌ கண்‌ கை உந்தி காலுடை ஆடைகள்‌ செய்ய பிரான்‌ திருமால்‌ எம்மான்‌ செழுநீர்‌ வயல்‌ குட்டநாட்டூத்‌ திருப்புலியூர்‌ அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌ அன்னைமீர்‌ இதற்கு என்‌ செய்கேனோ?

3536

அன்னைமீர்‌ இதற்கு என்‌ செய்கேன்‌? அணிமேருவின்‌ மீதுலவும்‌ துன்னுசூழ்‌ சுடர்‌ ஞாயிறும்‌ அன்றியும்‌ பல்சுடர்களும்‌ போல்‌ மின்னு நீள்முடியாரம்‌ பல்கலன்‌ தானுடை எம்பெருமான்‌ புன்னை அம்பொழில்‌ சூழ்‌ திருப்புலியூர்‌ புகழும்‌ இவளே

3537

புகழும்‌ இவள்‌ நின்று இராப்பகல்‌ பொருநீர்க்கடல்‌ தீப்பட்டு எங்கும்‌ திகழும்‌ எரியொடு செல்வதொப்பச்‌ செழுங்கதிர்‌ ஆழி முதல்‌ புகழும்‌ பொருபடை ஏந்திப்‌ போர்‌ புக்கு அசுரரைப்‌ பொன்றுவித்தான்‌ திகழுமணி நெடூமாட நீடு திருப்புலியூர்‌ வளமே

3538

ஊர்வளம்‌ கிளர்‌ சோலையும்‌ கரும்பும்‌ பெருஞ்செந்நெலும்‌ சூழ்ந்து ஏர்வளம்‌ கிளர்‌ தண்பணைக்‌ குட்டநாட்டூத்‌ திருப்புலியூர்‌ சீர்வளம்‌ கிளர்‌ மூவுலகுண்டுமிழ்‌ தேவபிரான்‌ பேர்வளம்‌ கிளர்ந்தன்றிப்‌ பேச்சிலள்‌ இன்று இப்புனையிழையே

3539

புனையிழைகள்‌ அணிவும்‌ ஆடை உடையும்‌ புதுக்கணிப்பும்‌ நினையும்‌ நீர்மை அதன்று இவட்கிது நின்று நினைக்கப்‌ புக்கால்‌ சுனையினுள்‌ தடந்தாமரை மலரும்‌ தண்திருப்புலியூர்‌ முனைவன்‌ மூவுலகாளி அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே

3540

திருவருள்‌ மூழ்கி வைகலும்‌ செழுநீர்‌ நிறக்‌ கண்ணபிரான்‌ திருவருள்களும்‌ சேர்ந்தமைக்கு அடையாளம்‌ திருந்தவுள திருவருள்‌ அருளால்‌ அவன்‌ சென்று சேர்‌ தண்திருப்புலியூர்‌ திருவருள்‌ கமுகு ஒண்பழத்தது மெல்லியல்‌ செவ்விதழே

3541

மெல்லிலைச்‌ செல்வ வண்கொடயுப்‌ புல்க வீங்கிளந்தாள்‌ கமுகின்‌ மல்லிலை மடல்‌ வாழை ஈன்கனி சூழ்ந்து மணம்‌ கமழந்து புல்லிலைத்‌ தெங்கினூடு காலுலவும்‌ தண்திருப்புலியூர்‌ மல்லலம்‌ செல்வக்‌ கண்ணன்‌ தாள்‌ அடைந்தாள்‌ இம்மடவரலே

3542

மடவரல்‌ அன்னைமீர்கட்கு என்‌ சொல்லிச்‌ சொல்லுகேன்‌? மல்லைச்‌ செல்வ வடமொழி மறை வாணர்‌ வேள்வியுள்‌ நெய்யழல்‌ வான்புகை போய்‌ திடவிசும்பில்‌ அமரர்‌ நாட்டை மறைக்கும்‌ தண்திருப்புலியூர்‌ பட அரவணையான்‌ தன்‌ நாமம்‌ அல்லால்‌ பரவாள்‌ இவளே

3543

பரவாள்‌ இவள்‌ நின்று இராப்பகல்‌ பனிநீர்‌ நிறக்‌ கண்ணபிரான்‌ விரவார்‌!! இசை மறை வேதியர்‌ ஒலி வேலையின்‌ நின்றொலிப்ப கரவார்‌ தடந்தொறும்‌ தாமரைக்‌ கயம்‌ தீவிகை நின்றலரும்‌ புரவார்‌ கழனிகள்‌ சூழ்‌ திருப்புலியூர்ப்‌ புகழன்றி மற்றே

3544

அன்றி மற்றோரு உபாயம்‌ என்‌? இவள்‌ அந்தண்துழாய்‌ கமழ்தல்‌ குன்றமா மணிமாட மாளிகைக்‌ கோலக்குழாங்கள்‌ மல்கி தென்திசைத்‌ திலதம்புரை குட்டநாட்டூத்‌ திருப்புலியூர்‌ நின்ற மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்ப்பட்டதே

3545

நேர்ப்பட்ட நிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌ தன்னடிமை நேர்ப்பட்ட தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ சொல்‌ நேர்ப்பட்ட தமிழ்‌ மாலை ஆயிரத்துள்‌ இவை!!! பத்தும்‌ நேர்ப்பட்டார்‌ அவர்‌ நேர்ப்பட்டார்‌ நெடுமாற்கு அடிமை செய்யவே 11 !! இவையுமோர்‌