Skip to the text
திருவாய்மொழி

8-8. கண்கள்‌ சிவந்து

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கண்கள் சிவந்து பெரியவாய், வாயும் சிவந்து கனிந்து, உள்ளே வெண்பல் இலகு சுடர்" — சிவந்த பெரிய கண்களும், கனிந்த செவ்வாயும், உள்ளே ஒளிரும் வெண்பற்களும் என அவனுடைய திருமுகத்தை நுணுக்கமாக வருணிக்கும் பதிகம். மிக அருகில் நின்று பார்ப்பவனுக்கே தெரியும் விவரங்கள் இவை. தூரத்திலிருந்து துதிப்பது முடிந்து, முகத்தைப் பார்ப்பது தொடங்கிவிட்டது.

திருவாய்மொழி 8-8 கண்கள்‌ சிவந்து

3524

கண்கள்‌ சிவந்து பெரியவாய்‌ வாயும்‌ சிவந்து கனிந்து உள்ளே வெண்பல்‌ இலகு சுடர்‌ இலகு விலகு மகர குண்டலத்தன்‌ கொண்டல்‌ வண்ணன்‌ சுடர்‌ முடியன்‌ நான்கு தோளன்‌ குனிசார்ங்கன்‌!' ஒண்சங்கதை வாள்‌ ஆழியான்‌ ஒருவன்‌ அடியேன்‌ உள்ளானே

3525

அடியேன்‌ உள்ளான்‌ உடல்‌ உள்ளான்‌ அண்டத்தகத்தான்‌ புறத்துள்ளான்‌ படியேய்‌ இதுவென்று உரைக்கலாம்‌ படியன்‌ அல்லன்‌ பரம்பரன்‌ கடிசேர்‌ நாற்றத்துள்ளாலை இன்பத்‌ துன்பக்‌ கழி நேர்மை ஒடியா இன்பப்‌ பெருமையோன்‌ உணர்வில்‌ உம்பர்‌ ஒருவனே

3526

உணர்வில்‌ உம்பர்‌ ஒருவனை அவனதருளால்‌ உறல்‌ பொருட்டு என்‌ உணர்வின்‌ உள்ளே இருத்தினேன்‌ அதுவும்‌ அவனது இன்னருளே உணர்வும்‌ உயிரும்‌ உடம்பும்‌ மற்று உலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப்‌ பெற ஊர்ந்திறவேறி யானும்‌ தானாய்‌ ஒழிந்தானே

3527

யானும்‌ தானாய்‌ ஒழிந்தானை யாதும்‌ யவர்க்கும்‌ முன்னோனை தானும்‌ சிவனும்‌ பிரமனுமாகிப்‌ பணைத்த தனி முதலை ர்‌ தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அழுதுமாகித்‌ தித்தித்து என்‌ ஊனில்‌ உயிரில்‌ உணர்வினில்‌ நின்ற ஒன்றை உணர்ந்தேனே

3528

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதனுள்‌ நேர்மை அதுவிது என்று ஒன்றும்‌ ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும்‌ மேலும்‌ காண்பரிது சென்று சென்று பரம்பரமாய்‌ யாதும்‌ இன்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்று அறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானம்‌ கடந்ததே

3529

நன்றாய்‌ ஞானம்‌ கடந்து போய்‌ நல்லிந்திரியம்‌ எல்லாம்‌ ஈர்த்து ஒன்றாய்க்‌ கிடந்த அரும்‌ பெரும்‌ பாழ்‌ உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து சென்றாங்கு இன்ப துன்பங்கள்‌ செற்றுக்‌ களைந்து பசையற்றால்‌ அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே

3530

அதுவே வீடு வீடு பேற்று இன்பந்தானும்‌ அது தேறி எதுவே தானும்‌ பற்றின்றி யாதுமிலிகள்‌ ஆகிற்கில்‌ அதுவே வீடு வீடு பேற்று இன்பந்தானும்‌ அது தேறாது எதுவே வீடூ? ஏது இன்பம்‌? என்று எய்த்தார்‌ எய்த்தார்‌ எய்த்தாரே

3531

எய்த்தார்‌ எய்த்தார்‌ எய்த்தார்‌ என்று இல்லத்தாரும்‌ புறத்தாரும்‌ மொய்த்து ஆங்கலறி முயங்கத்‌ தாம்‌ போகும்‌ போது உன்மத்தர்‌ போல்‌ பித்தே ஏறி அனுராகம்‌ பொழியும்‌ போது எம்‌ பெம்மானோடு ஒத்தே சென்று அங்குள்ளம்‌ கூடக்‌ கூடிற்றாகில்‌ நல்லுறைப்பே

3532

கூடிற்றாகில்‌ நல்லுறைப்புக்‌ கூடாமையைக்‌ கூடினால்‌ ஆடல்‌ பறவை உயர்‌ கொடு எம்மாயனாவது அதுவதுவே விடைப்‌ பண்ணி ஒருபரிசே எதிர்வும்‌ நிகழ்வும்‌ கழிவுமாய்‌ ஓடத்‌ திரியும்‌ யோகிகளும்‌ உளரும்‌ இல்லை அல்லரே

3533

உளரும்‌ இல்லை அல்லராய்‌ உளரா இல்லை ஆகியே உளர்‌ எம்மொருவர்‌ அவர்‌ வந்து என்‌ உள்ளத்துள்ளே உறைகின்றார்‌ வளரும்‌ பிறையும்‌ தேய்‌ பிறையும்‌ போல அசைவும்‌ ஆக்கமும்‌ வளரும்‌ சுடரும்‌ இருளும்‌ போல்‌ தெருளும்‌ மருளும்‌ மாய்த்தோமே

3534

தெருளும்‌ மருளும்‌ மாய்த்துத்‌ தன்‌ திருந்து செம்பொற்கழலடிக்‌ கீழ்‌ அருளி இருத்தும்‌ அம்மானாம்‌ அயனாம்‌ சிவனாம்‌ திருமாலால்‌ அருளப்பட்ட சடகோபன்‌ ஓராயிரத்துள்‌ இப்பத்தால்‌ அருளி அடிக்கீழ்‌ இருத்தும்‌ நம்‌ அண்ணல்‌ கருமாணிக்கமே