Skip to the text
திருவாய்மொழி

8-7. இருத்தும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித்து" — தன் பொன்னடியின் கீழ் என்னை இருத்துவான் என்று நான் விரும்பிக் காத்திருந்தேன் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். எதிர்பார்ப்பும் காத்திருப்பும் நிறைந்த நிலை இது. வேண்டியது கிடைக்குமா என்ற ஐயம் இன்னும் விலகவில்லை.

திருவாய்மொழி 8-7 இருத்தும்‌

3513

இருத்தும்‌ வியந்து என்னைத்‌ தன்‌ பொன்னடுக்‌ கீழ்‌ என்று அருத்தித்து எனைத்தோர்‌ பலநாள்‌ அழைத்தேற்கு பொருத்தமுடை வாமனன்‌ தான்‌ புகுந்து என்தன்‌ கருத்தையுற வீற்றிருந்தான்‌ கண்டு கொண்டே

3514

இருந்தான்‌ கண்டு கொண்டு எனதேழை நெஞ்சாளும்‌ திருந்தாத ஓரைவரைத்‌ தேய்ந்தற மன்னி பெருந்தாள்‌ களிற்றுக்கு அருள்‌ செய்த பெருமான்‌ தருந்தான்‌ அருள்‌ தான்‌ இனி யான்‌ அறியேனே

3515

அருள்‌ தான்‌ இனி யான்‌ அறியேன்‌ அவன்‌ என்னுள்‌ இருள்‌ தான்‌ அற வீற்றிருந்தான்‌ இதுவல்லால்‌ ர பொருள்‌ தான்‌ எனின்‌ மூவுலகும்‌ பொருளல்ல மருள்‌ தான்‌ ஈதோ? மாய மயக்கு மயக்கே

3516

மாய மயக்கு மயக்கான்‌ என்னை வஞ்சித்து ஆயன்‌ அமரர்க்கு அரியேறு எனதம்மான்‌ தூய சுடர்ச்‌ சோதி தனதென்னுள்‌ வைத்தான்‌ தேசம்‌ திகழும்‌ தன்‌ திருவருள்‌ செய்தே

3517

திகழும்‌ தன்‌ திருவருள்‌ செய்து உலகத்தார்‌ புகழும்‌ புகழ்‌ தானது காட்டித்‌ தந்து என்னுள்‌ திகழும்‌ மணிக்குன்றம்‌ ஒன்றே ஒத்து நின்றான்‌ புகழும்‌ புகழ்‌ மற்றெனக்குமோர்‌ பொருளே?

3518

பொருள்‌ மற்றெனக்குமோர்‌ பொருள்‌ தன்னில்‌ சீர்க்கத்‌ தருமேல்‌ பின்னை யார்க்கு அவன்‌ தன்னைக்‌ கொடுக்கும்‌? கருமாணிக்கக்‌ குன்றத்துத்‌ தாமரை போல்‌ திருமார்பு கால்‌ கண்‌ கை செவ்வாய்‌ உந்தியானே

3519

செவ்வாய்‌ உந்தி வெண்பல்‌ சுடர்க்குழை தம்மோடு! எவ்வாய்ச்‌ சுடரும்‌ தம்மில்‌ முன்வளாய்க்‌ கொள்ள செவ்வாய்‌ முறுவலோடு எனதுள்ளத்து இருந்த அவ்வாய்‌ அன்றி யான்‌ அறியேன்‌ மற்றருளே

3520

அறியேன்‌ மற்றருள்‌ என்னை ஆளும்‌ பிரானார்‌ வெறிதே அருள்‌ செய்வர்‌ செய்வார்கட்கு உகந்து சிறியேனுடைச்‌ சிந்தையுள்‌ மூவுலகும்‌ தன்‌ நெறியா வயிற்றில்‌ கொண்டு நின்றொழிந்தாரே

3521

வயிற்றில்‌ கொண்டு நின்றொழிந்தாரும்‌ யவரும்‌ வயிற்றில்‌ கொண்டு நின்றொரு மூவுலகும்‌ ர தம்‌ வயிற்றில்‌ கொண்டு நின்ற வண்ணம்‌ நின்ற மாலை வயிற்றில்‌ கொண்டு மன்ன வைத்தேன்‌ மதியாலே

3522

வைத்தேன்‌ மதியால்‌ எனது உள்ளத்தகத்தே எய்த்தேயொழிவேன்‌ அல்லேன்‌ என்றும்‌ எப்போதும்‌ மொய்த்தேய்‌ திரை மோது தண்பாற்கடலுளால்‌ பைத்தேய்‌ சுடர்ப்‌ பாம்பணை நம்‌ பரனையே

3523

சுடர்ப்‌ பாம்பணை நம்‌ பரனைத்‌ திருமாலை அடிச்சேர்‌ வகை வண்குருகூர்ச்‌ சடகோபன்‌ முடிப்பான்‌ சொன்ன ஆயிரத்து இப்பத்தும்‌ சன்மம்‌ விட தேய்ந்தற நோக்கும்‌ தன்‌ கண்கள்‌ சிவந்தே