Skip to the text
திருவாய்மொழி

8-6. எல்லியும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ, நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்" — இரவும் காலையும் அவனை நினைத்து எழுமாறு அருள் செய்பவனைச் சொல்லும் பதிகம். நினைக்கும் ஆற்றலையும் அவனே தருகிறான் என்பதே இதன் நுட்பம். முயற்சி நம்முடையது என்று நினைப்பதே மயக்கம்.

திருவாய்மொழி 8-6 எல்லியும்‌

3502

எல்லியும்‌ காலையும்‌ ர தன்னை நினைந்தெழ நல்ல அருள்கள்‌ நமக்கே தந்து அருள்‌ செய்வான்‌ அல்லியந்தண்ணந்துழாய்‌ முடி அப்பனூர்‌ செல்வர்கள்‌ வாழும்‌ திருக்கடித்தானமே

3503

திருக்கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடூத்து உள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே

3504

ஒருவர்‌ இருவரோர்‌ மூவரென நின்று உருவு கரந்து உள்ளுந்தோறும்‌ தித்திப்பான்‌ திரு அமர்‌ மார்வன்‌ திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்‌ பிரானே

3505

மாயப்‌ பிரான்‌ என வல்வினை மாய்ந்தற நேசத்தினால்‌ நெஞ்சம்‌ நாடு குடி கொண்டான்‌ தேசத்தமரர்‌ திருக்கடித்தானத்தை வாசப்பொழில்‌ மன்னு கோயில்‌ கொண்டானே

3506

கோயில்‌ கொண்டான்‌ தன்‌ திருக்கடித்தானத்தை கோயில்‌ கொண்டான்‌ அதனோடும்‌ என்‌ நெஞ்சகம்‌ கோயில்‌ கொள்‌ தெய்வம்‌ எல்லாம்‌ தொழ வைகுந்தம்‌ கோயில்‌ கொண்ட குடக்கூத்த அம்மானே

3507

கூத்த அம்மான்‌ கொடியேன்‌ இடர்‌ முற்றவும்‌ மாய்த்த அம்மான்‌ மதுசூத அம்மான்‌ உறை பூத்த பொழில்‌ தண்திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொண்மின்‌ இடரே

3508

கொண்மின்‌ இடர்‌ கெட உள்ளத்துக்‌ கோவிந்தன்‌ மண்‌ விண்‌ முழுதும்‌ அளந்த ஒண்தாமரை மண்ணவர்‌ தாம்‌ தொழ வானவர்‌ தாம்‌ வந்து நண்ணு திருக்கடித்தான நகரே

3509

தான நகர்கள்‌ தலைச்சிறந்து எங்கெங்கும்‌ வான்‌ இந்நிலம்‌ கடல்‌ முற்றும்‌ எம்‌ மாயற்கே ஆனவிடத்தும்‌ என்‌ நெஞ்சும்‌ திருக்கடித்‌ தான நகரும்‌ தனதாயப்‌ பதியே

3510

தாயப்‌ பதிகள்‌ தலைச்சிறந்து எங்கெங்கும்‌ மாயத்தினால்‌ மன்னி வீற்றிருந்தான்‌ உறை தேசத்தமரர்‌ திருக்கடித்தானத்துள்‌ ஆயர்க்கு அதிபதி அற்புதன்‌ தானே

3511

அற்புதன்‌ நாராயணன்‌ அரி வாமனன்‌ நிற்பது மேவி இருப்பது என்‌ நெஞ்சகம்‌ நற்புகழ்‌ வேதியர்‌ நான்மறை நின்றதிர்‌ கற்பகச்‌ சோலைத்‌ திருக்கடித்தானமே

3512

சோலை திருக்கடித்தானத்து உறை திரு மாலை மதிள்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ பாலோடு அமுதன்ன ஆயிரத்து இப்பத்தும்‌ மேலை வைகுந்தத்து இருத்தும்‌ வியந்தே