திருவாய்மொழி 8-4 வார்கடாவருவி
8-4. வார்கடாவருவி
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"வார் கடா அருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி" — மதம் பாயும் யானையின் தந்தங்களை முறித்து உருட்டியவனைப் பாடும் பதிகம். திருமூழிக்களத்தை நோக்கி இப்பதிகம் அமைந்திருக்கிறது. வலிமையின் காட்சியை ஒரு தலத்தின் அமைதியுடன் இணைக்கும் வழக்கம் இங்கும் தொடர்கிறது.
வார்கடா அருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல் போர்கடா அரசர் புறக்கிட மாட மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்தளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் செங்கயலுகளும் தேம்பணை புடை சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர்துணையே?
என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த எம்பெருமான் முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம்பெருமான் அடியல்லால் சரண்! நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமாணிக்கம் என்னம்மான் செறிகுலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற எம்பெருமான் அடியிணை அல்லதோர் அரணே
அல்லதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை அல்லது என்னாவி அமர்ந்தணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும் நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல்லரணே
எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை தனக்கும் தன் தன்மை அறிவரியானைத் தடங்கடல் பள்ளி அம்மானை மனக்கொள் சீர் மூவாயிரவர் வண்சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும் திருச்செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் ர் திருச்செய்ய கமல உந்தியும் செய்ய கமல! மார்பும் செய்ய உடையும் திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே
திகழ என் சிந்தையுள் இருந்தானைச் செழுநிலத் தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே இடைப்புக்கோருருவும் ஒழிவில்லை அவனே புகழ்வில்லை யாவையும் தானே கொடைப் பெரும்புகழார் இனையர்!!! தன்னானார் கூறிய இச்சையோடு ஒழுக்கம் நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை அமர்ந்த தண்பழனத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி அவனி தேவர் வாழ்வு அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே
தேனை நன்பாலைக் கன்னலை அமுதைத் திருந்துலகுண்ட அம்மானை வான நான்முகனை மலர்ந்த தண்கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை கோனை வண்குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் வானின் மீதேற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மாமாயக் கூத்தினையே