Skip to the text
திருவாய்மொழி

8-3. அங்கும்‌ இங்கும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது" — தேவரும் அசுரரும் எவரும் நீ இத்தன்மையன் என்று உன்னை அறிய இயலவில்லை என்று சொல்லும் பதிகம். அறிய முடியாமையை ஒரு குறையாக அல்ல, அவனுடைய பெருமையாகவே ஆழ்வார் காண்கிறார். புரியாதது புரியாமலே இருப்பதே சரி என்னும் தெளிவு.

திருவாய்மொழி 8-3 அங்கும்‌ இங்கும்‌

3469

அங்கும்‌ இங்கும்‌ வானவர்‌ தானவர்‌ யாவரும்‌ எங்கும்‌ இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி அங்கம்‌ சேரும்‌ பூமகள்‌ மண்மகள்‌ ஆய்மகள்‌ சங்கு சக்கரக்‌ கையவன்‌ என்பர்‌ சரணமே

3470

சரணமாகிய நான்மறை நூல்களும்‌ சாராதே மரணம்‌ தோற்றம்‌ வான்‌ பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்‌ கரணப்‌ பல்படை பற்றறவோடும்‌ கனலாழி அரணத்‌ திண்படை ஏந்திய ஈசற்கு ஆளாயே

3471

ஆளுமாளார்‌ ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார்‌ தாம்‌ வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின்‌ செல்வார்‌ மாற்றில்லை தாளும்‌ தோளும்‌ கைகளை ஆரத்‌ தொழக்‌ காணேன்‌ நாளும்‌ நாளும்‌ நாடூவன்‌ அடியேன்‌ ஞாலத்தே

3472

ஞாலம்‌ போனகம்‌ பற்றி ஓர்‌ முற்றா உருவாகி ஆலம்‌ பேரிலை அன்னவசம்‌ செய்யும்‌ அம்மானே! காலம்‌ பேர்வதோர்‌ காரிருள்‌ ஊழி ஒத்துளதால்‌ உன்‌ கோலங்காரெழில்‌ காணலுற்று ஆழும்‌ கொடியேற்கே

3473

கொடியார்‌ மாடக்‌ கோளாரகத்தும்‌ புளிங்குடியும்‌ மடியாதின்னே நீ துயில்‌ மேவி மகிழ்ந்தது தான்‌ அடியார்‌ அல்லல்‌ தவிர்த்த அசைவோ? அன்றேல்‌ இப்‌ படி தான்‌ நீண்டு தாவிய அசைவோ? பணியாயே

3474

பணியா அமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌ அணியார்‌ ஆழியும்‌ சங்கமும்‌ ஏந்துமவர்‌ காண்மின்‌ தணியா வெந்நோய்‌ உலகில்‌ தவிர்ப்பான்‌ திருநீல மணியார்‌ மேனியோடு என்‌ மனம்‌ சூழ வருவாரே

3475

வருவார்‌ செல்வார்‌ வண்பரிசாரத்து இருந்த என்‌ திருவாழ்‌ மார்வற்கு என்‌ திறம்‌ சொல்லார்‌ செய்வதென்‌? உருவார்‌ சக்கரம்‌ சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடூுழல்வான்‌ ஓரடியானும்‌ உளன்‌ என்றே

3476

என்றே! என்னை உன்‌ ஏரார்‌ கோலத்‌ திருந்தடிக்‌ கீழ்‌ நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள!' நினைப்பது தான்‌? ர்‌ குன்றேழ்‌ பாரேழ்‌ சூழ்கடல்‌ ஞாலம்‌ முழுவேழும்‌ நின்றே தாவிய நீள்கழல்‌ ஆழித்‌ திருமாலே!

3477

திருமால்‌! நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்‌ பெருமான்‌ தன்மையை யார்‌ அறிகிற்பார்‌? பேசி என்‌? ஒருமா முதல்வா! ஊழிப்பிரான்‌! என்னை ஆளுடை கருமா மேனியன்‌ என்பன்‌ என்‌ காதல்‌ கலக்கவே

3478

கலக்கம்‌ இல்லா நல்தவ முனிவர்‌ கரை கண்டோர்‌ துளக்கம்‌ இல்லா வானவர்‌ எல்லாம்‌ தொழுவார்கள்‌ மலக்கம்‌ எய்த மாகடல்‌ தன்னைக்‌ கடைந்தானை உலக்க நாம்‌ புகழ்கிற்பது என்‌ செய்வது உரையீரே

3479

உரையா வெந்நோய்‌ தவிர அருள்‌ நீள்முடியானை வரையார்‌ மாட மன்னு குருகூர்ச்‌ சடகோபன்‌ உரையேய்‌ சொல்‌ தொடை ஓாயிரத்துள்‌ இப்பத்தும்‌ நிரையே வல்லார்‌ நீடூலகத்துப்‌ பிறவாரே