திருவாய்மொழி 8-2 நங்கள் வரிவளை
8-2. நங்கள் வரிவளை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"நங்கள் வரிவளையாயங்காளோ! நம்முடை ஏதலர் முன்பு நாணி" — வளையல் அணிந்த தோழியரே, பகைவர் முன்னால் நாணி நான் ஒன்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் என்று தலைவி சொல்லும் பதிகம். சொல்ல முடியாத ஒன்றைச் சொல்ல முயலும் தவிப்பு இதில் உண்டு. வெளிப்படுத்த முடியாத துன்பம் இரட்டிப்பாகவே இருக்கிறது.
நங்கள் வரிவளையாயங்காளோ! நம்முடை ஏதலர் முன்பு நாணி நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் சங்கம் சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கடவாணணை வேண்டிச் சென்றே
வேண்டிச் சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் ஈண்டிது உரைக்கும்படியை அந்தோ! காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் காண்தகு தாமரைக்கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால் ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே?
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின் ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர்! இனி நாணித் தான் என்? நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட கோலவளையொடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே
கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்கம்! எல்லாம் பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடு மதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழிவலவனை ஆதரித்தே
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம் தோழியர்காள்! நம்முடையமே தான்? சொல்லுவதோ இங்கு அரியது தான் ஊழிதோறூழி ஒருவனாக நன்குணர்வார்க்கும் உணரலாகா சூழலுடைய சுடர் கொளாதித் தொல்லையஞ்சோதி நினைக்குங்காலே
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம் மாமை கொண்டான் ர் அல்லிமலர்த் தண்துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர் வல்லி வளவயல் சூழ் குடந்தை மாமலர்க்கண் வளர்கின்ற மாலே
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று ஒலமிட என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் ஏலமலர்க் குழல் அன்னைமீர்காள்! என்னுடைத் தோழியர்காள்! என் செய்கேன்? காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடு எங்களிடை இல்லையே
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள்! குயில்காள்! மயில்காள்! உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட்டாது கொண்டான் அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே
காண் கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னைக் கை செயப்பாலதோர் மாயம் தன்னால் மாண்குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண்சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்? என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்!
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்! யான் இனிச் செய்வதென்? என்னெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு பன்னெ௫டூஞ்சூழ் சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி ஹூ கோல நீல நன்னெடங்குன்றம் வருவதொப்பான் நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண்குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதில் அந்தாதி ஓராயிரத்துள் இவையுமோர் பத்து இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலராகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே