Skip to the text
திருவாய்மொழி

8-1. தேவிமாராவார்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"தேவிமார் ஆவார் திருமகள் பூமி; ஏவம் மற்று அமரர் ஆட்செய்வார்" — தேவியர் திருமகளும் பூமியும்; அமரர் ஏவல் செய்பவர் என்று அவனுடைய நிலையை வரிசைப்படுத்தும் பதிகம். சூழலை விவரிப்பதன் மூலம் மையத்தைச் சொல்லும் முறை. யார் அருகில் இருக்கிறார்கள் என்பதே ஒருவரின் நிலையைச் சொல்லிவிடும்.

திருவாய்மொழி 8-1 தேவிமாராவார்‌

3447

தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி ஏவமற்றமரர்‌ ஆட்செய்வார்‌ மேவிய உலகம்‌ மூன்றவையாட்சி வேண்டு வேண்டூருவம்‌ நின்னுருவம்‌ பாவியேன்‌ தன்னை அடூகின்ற கமலக்‌ கண்ணதோர்‌ பவளவாய்‌ மணியே! ஆவியே! அமுதே! அலைகடல்‌ கடைந்த அப்பனே! காணுமாறு அருளாய்‌

3448

காணுமாறு அருளாய்‌ என்றென்றே கலங்கிக்‌ கண்ணநீர்‌ அலமர வினையேன்‌ பேணுமாறு எல்லாம்‌ பேணி நின்‌ பெயரே பிதற்றுமாறு அருள்‌ எனக்கு அந்தோ! காணுமாறு அருளாய்‌ காகுத்தா! கண்ணா! தொண்டனேன்‌ கற்பகக்‌ கனியே! பேணுவார்‌ அமுதே! பெரிய தண்புனல்‌ சூழ்‌ பெருநிலம்‌ எடுத்த பேராளா!

3449

எடுத்த பேராளன்‌ நந்தகோபன்‌ தன்‌ இஇன்னுயிர்ச்‌ சிறுவனே! அசோதைக்கு அடுத்த பேரின்பக்‌ குலவிளங்களிறே! அடியனேன்‌ பெரிய அம்மானே! கடுத்த போர்‌ அவுணன்‌ உடல்‌ இருபிளவாக்‌ கையுகிர்‌ ஆண்ட எங்கடலே! அடுத்ததோர்‌ உருவாய்‌ இன்று நீ வாராய்‌ எங்ஙனம்‌ தேறுவர்‌ உமரே?

3450

உமருகந்துகந்த உருவம்‌ நின்‌ உருவமாகி உன்தனக்கு அன்பரானார்‌ அவர்‌ உகந்தமர்ந்த செய்கை உன்‌ மாயை அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌ வினையேன்‌ அமரது பண்ணி அகலிடம்‌ புடை சூழ்‌ அடுபடை அவித்த அம்மானே! அமரர்‌ தம்‌ அமுதே! அசுரர்கள்‌ நஞ்சே! என்னுடை ஆருயிரேயோ!

3451

ஆருயிரேயோ! அகலிடம்‌ முழுதும்‌ படைத்திடந்து உண்டுமிழ்ந்து அளந்த பேருயிரேயோ! பெரிய நீர்‌ படைத்து அங்குறைந்து அது கடைந்து அடைத்துடைத்த ஈர சீரியரேயோ! மனிசர்க்குத்‌ தேவர்‌ போலத்‌ தேவர்க்கும்‌ தேவாவோ! ஒருமிரேயோ? உலகங்கட்கு எல்லாம்‌ உன்னை நான்‌ எங்கு வந்துறுகோ?

3452

எங்கு வந்துறுகோ? என்னை ஆள்வானே! ஏழுலகங்களும்‌ நீயே அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும்‌ நீயே அவற்றவை கருமமும்‌ நீயே பொங்கிய புறம்பால்‌ பொருள்‌ உளவேலும்‌ அவையுமோ நீ இன்னேயானால்‌ மங்கிய அருவாம்‌ நேர்ப்பமும்‌ நீயே வான்புலன்‌ இறந்ததும்‌ நீயே

3453

இறந்ததும்‌ நீயே எதிர்ந்ததும்‌ நீயே நிகழ்வதோ நீ இன்னேயானால்‌ சிறந்த நின்‌ தன்மை அதுவிதுவுது என்று அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌ வினையேன்‌ கறந்த பால்‌ நெய்யே! நெய்யின்‌ இன்சுவையே! கடலினுள்‌ அமுதமே! அமுதில்‌ பிறந்த இன்சுவையே! சுவையது பயனே! பின்னைதோள்‌ மணந்த பேராயா!

3454

மணந்த பேராயா! மாயத்தால்‌ முழுதும்‌ வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய்‌! அசுரர்‌ வன்கையர்‌ கூற்றமே! கொடுய புள்ளுயர்த்தாய்‌! பணங்கள்‌ ஆயிரம்‌! உடைய பைந்நாகப்‌ பள்ளியாய்‌! பாற்கடல்‌ சேர்ப்பா! வணங்குமாறு அறியேன்‌ மனமும்‌ வாசகமும்‌ செய்கையும்‌ யானும்‌ நீ தானே

3455

யானும்‌ நீ தானே யாவதோ மெய்யே அருநரகவையும்‌ நீயானால்‌ வானுயர்‌ இன்பம்‌ எய்திலென்‌? மற்றை நரகமே எய்திலென்‌? எனிலும்‌ யானும்‌ நீ தானாய்த்‌ தெளிதொறும்‌ நன்றும்‌ அஞ்சுவன்‌ நரகம்‌ நானடைதல்‌ வானுயர்‌ இன்பம்‌ மன்னி வீற்றிருந்தாய்‌! அருளு நின்‌ தாள்களை எனக்கே

3456

தாள்களை எனக்கே தலைத்தலைச்‌ சிறப்பத்‌ தந்த பேருதவிக்‌ கைம்மாறா தோள்களை ஆரத்‌ தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்‌ சோதீ! தோள்கள்‌ ஆயிரத்தாய்‌! முடிகள்‌ ஆயிரத்தாய்‌! துணைமலர்க்‌ கண்கள்‌ ஆயிரத்தாய்‌! தாள்கள்‌ ஆயிரத்தாய்‌! பேர்கள்‌ ஆயிரத்தாய்‌! தமியனேன்‌ பெரியவப்பனே!

3457

பெரியவப்பனைப்‌ பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்கு உரியவப்பனை அமரரப்பனை உலகுக்கோர்‌ தனியப்பன்‌ தன்னை பெரிய வண்குருகூர்‌ வண்சடகோபன்‌ பேணின ஆயிரத்துள்ளும்‌ உரிய சொல்மாலை இவையும்‌ பத்து இவற்றால்‌ உய்யலாம்‌ தொண்டீர்‌! நங்கட்கே