Skip to the text
திருவாய்மொழி

7-9. என்றைக்கும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி" — என்னை எடுத்துக்கொண்ட அந்நாளிலேயே என்னைத் தன்னுடையவனாக ஆக்கிக்கொண்டான் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். தன் பாடல்களைத் தானே பாடவில்லை, அவனே தன்னுள் இருந்து பாடுகிறான் என்பதை அறிவிக்கிறார். கவிஞனும் கவிதையும் அவனுடையவை என்னும் ஒப்படைப்பு இது.

திருவாய்மொழி 7-9 என்றைக்கும்‌

3425

என்றைக்கும்‌ என்னை உய்யக்‌ கொண்டு போகிய அன்றைக்கு அன்றென்னைத்‌ தன்னாக்கி என்னால்‌ தன்னை இன்தமிழ்‌ பாடிய ஈசனை ஆதியாய்‌ நின்ற என்‌ சோதியை என்‌ சொல்லி நிற்பனோ?

3426

என்‌ சொல்லி நிற்பன்‌? என்‌ இன்னுயிர்‌ இன்றொன்றாய்‌ என்‌ சொல்லால்‌ யான்‌ சொன்ன இன்கவியென்பித்து தன்‌ சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த மாயன்‌ என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே

3427

ஆமுதல்வன்‌ இவன்‌ என்று தற்றேற்றி'! என்‌ நாழுதல்‌ வந்து புகுந்து நல்லின்கவி தூழுதல்‌ பத்தர்க்குத்‌ தான்‌ தன்னைச்‌ சொன்ன என்‌ ? என்ன இயற்கைகளால்‌ நின்றிட்டாய்‌ என்னை ஆளும்‌ கண்ணா '! தன்தேற்றி வாய்முதல்‌ அப்பனை என்று மறப்பனோ?

3428

அப்பனை என்று மறப்பன்‌? என்னாகியே தப்புதல்‌ இன்றித்‌ தனைக்‌ கவி தான்‌ சொல்லி ஒப்பிலாத்‌ தீவினையேனை உய்யக்‌ கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்‌ கண்டே

3429

சீர்‌ கண்டு கொண்டு திருந்து நல்லின்கவி நேர்பட யான்‌ சொல்லும்‌ நீர்மை இலாமையில்‌ ஏர்விலா என்னைத்‌ தன்னாக்கி என்னால்‌ தன்னை பார்‌ பரவு இன்கவி பாடும்‌ பரமரே

3430

இன்கவி பாடும்‌ பரம கவிகளால்‌ தன்கவி தான்‌ தன்னைப்‌ பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடனாக்கி என்னால்‌ தன்னை வன்கவி பாடும்‌ என்‌ வைகுந்த நாதனே

3431

வைகுந்த நாதன்‌ என!!! வல்வினை மாய்ந்தற செய்குந்தன்‌ தன்னை என்னாக்கி என்னால்‌ தன்னை ர்‌ வைகுந்தனாகப்‌ புகழ வண்தீங்கவி செய்குந்தன்‌ தன்னை எந்நாள்‌ சிந்தித்தார்வனோ?

3432

ஆர்வனோ? ஆழியங்கை எம்பிரான்‌ புகழ்‌ பார்‌ விண்‌ நீர்‌ முற்றும்‌ கலந்து பருகிலும்‌ ஏர்விலா என்னைத்‌ தன்னாக்கி என்னால்‌ தன்னை சீர்‌ பெற இன்கவி சொன்ன திறத்துக்கே

3433

திறத்துக்கே துப்புரவாம்‌! திருமாலின்‌ சீர்‌ இறப்பு எதிர்காலம்‌ பருகிலும்‌ ஆர்வனோ? மறப்பிலா என்னைத்‌ தன்னாக்கி என்னால்‌ தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே

3434

உதவிக்‌ கைம்மாறு என்னுயிர்‌ என்ன உற்றெண்ணில்‌ அதுவும்‌ மற்றாங்கவன்‌ தன்னது என்னால்‌ தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும்‌ ஒன்றுமில்லை செய்வது இங்குமங்கே

3435

இங்கும்‌ அங்கும்‌ திருமால்‌ அன்றி இன்மை கண்டு அங்ஙனே வண்குருகூர்ச்‌ சடகோபன்‌! ! சடகோபன்‌ சொல்‌ இங்ஙனே சொன்ன ஓராயிரத்து இப்பத்தும்‌ எங்ஙனே சொல்லினும்‌ இன்பம்‌ பயக்குமே