திருவாய்மொழி 7-7 ஏழையர்
7-7. ஏழையர்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ? அறியேன்" — அவனுடைய இரு கண்களும் ஏழையரின் உயிரை உண்ணும் இரட்டை யமன்களோ என்று ஆழ்வார் ஐயுறும் பதிகம். அழகின் கொடுமையைச் சொல்லும் அரிய படிமம் இது. காதலின் மொழியில் கண்கள் ஆயுதங்களாக மாறுவது இங்கே முழுமை பெறுகிறது.
ஏழையர் ஆவியுண்ணும் இணைக் கூற்றங்கொலோ? அறியேன் ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ? அறியேன் சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் தோழியர்காள்! அன்னைமீர்! என் செய்கேன்? துயராட்டியேனே
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்தென்? மாட்டூர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமுக்கு எனதாவி உள்ளே மாட்டிய வல்விளக்கின் சுடரய் நிற்கும் வாலியதே
வாலியதோர் கனி கொல்? வினையாட்டியேன் வல்வினை கொல்? கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங்கொலோ? அறியேன் ர நீல நெடுழுகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசைகள் எல்லாம் வந்து தோன்றும் என் இன்னுயிர்க்கே
இஇன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் திசையுள் இணை நீலவிற்கொல்? மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்? மதனன் தன்னுயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்று நின்றே
என்று நின்றே திகழும் செய்யவீன் சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றி என்னாவி அடும் அணிமுத்தங்கொலோ? அறியேன் ர் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனதாவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்விடமே
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்? பைவிடப் பாம்பணையான் திருக்குண்டலக் காதுகளே கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே
காண்மின்கள் அன்னையர்காள்! என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண்திங்கள் கொல்? நயந்தார்கட்கு நச்சிலை கொல்? சேண்மன்னு நால் தடந்தோள் பெருமான் தன் திருநுதலே கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே
கோளிழைத் தாமரையும் கொடுயும் பவளமும் வில்லும் கோளிழைத் தண்முத்தமும் தளிரும் குளிர் வான்பிறையும் கோளிழையாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன் கோளிழை வாள்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே
கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள்கொண்ட நீல நன்னூல் தழை கொல்? அன்று மாயன் குழல் விள்கின்ற பூண்தண்துழாய் விரை நாற வந்து என் உயிரை கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய் முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன உட்குடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் உட்குடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே