Skip to the text
திருவாய்மொழி

7-6. பாமருமூவுகலும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபாவோ?" — மூவுலகையும் படைத்த பத்மநாபனே, மூவுலகையும் அளந்த பாதங்களை உடையவனே என்று அழைத்து அழைத்து ஏங்கும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் "ஓ" என்ற ஏக்க ஒலியில் முடிகிறது. அழைப்பு பதில் பெறாதபோது அது ஓலமாக மாறுகிறது.

திருவாய்மொழி 7-6 பாமருமூவுகலும்‌

3392

பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ? பாமரு மூவுலகும்‌ அளந்த பற்பபாதாவோ? தாமரைக்‌ கண்ணாவோ! தனியேன்‌ தனியாளாவோ! தாமரைக்‌ கையாவோ! உன்னை என்று கொல்‌ சேர்வதுவே?

3393

என்று கொல்‌ சேர்வது? அந்தோ! அரன்‌ நான்முகன்‌ ஏத்தும்‌ செய்ய நின்‌ திருப்பாதத்தை யான்‌ நிலம்‌ நீர்‌ எரி கால்‌ விண்ணுயிர்‌ என்றிவை தாம்‌ முதலா முற்றுமாய்‌ நின்ற எந்தாயோ! குன்றெடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம்‌ கூத்தாவோ!

3394

காத்த எம்‌ கூத்தாவோ! மலை ஏந்திக்‌ கல்மாரி தன்னை பூத்தண்துழாய்‌ முடியாய்‌! புனை கொன்றை அஞ்செஞ்சடையாய்‌! வாய்த்த என்‌ நான்முகனே! வந்து என்‌ ஆருயிர்‌ நீயானால்‌ ஏத்தரும்‌ கீர்த்தியினாய்‌! உன்னை எங்குத்‌ தலைப்பெய்வனே?

3395

எங்குத்‌ தலைப்பெய்வன்‌ நான்‌? எழில்‌ மூவுலகும்‌ நீயே அங்குயர்‌ முக்கண்‌ பிரான்‌ பிரம பெருமானவன்‌ நீ வெங்கதிர்‌ வச்சிரக்கை இந்திரன்‌ முதலாத்‌ தெய்வம்‌ நீ கொங்கலர்‌ தண்ணந்துழாய்‌ முடி என்னுடைக்‌ கோவலனே!

3396

என்னுடைக்‌ கோவலனே! என்‌ பொல்லாக்‌ கருமாணிக்கமே! உன்னுடை உந்தி மலர்‌ உலகம்‌ அவை மூன்றும்‌ பரந்து உன்னுடைச்‌ சோதி வெள்ளத்து அகம்பால்‌ உன்னைக்‌ கண்டு கொண்டுட்டு என்னுடையாருயிரார்‌ எங்ஙனே கொல்‌ வந்தெய்துவரே?

3397

வந்தெய்துமாறு அறியேன்‌ மல்கு நீலச்சுடர்‌ தழைப்ப செஞ்சுடர்ச்‌ சோதிகள்‌ பூத்து ஒரு மாணிக்கம்‌ சேர்வது போல்‌ அந்தரமேல்‌ செம்பட்டோடு அடி உந்தி கை மார்வு கண்‌ வாய்‌ செஞ்சுடர்ச்‌ சோதி விடவுறை என்‌ திருமார்பனையே

3398

என்‌ திருமார்பன்‌ தன்னை என்‌ மலைமகள்‌ கூறன்‌ தன்னை என்றும்‌ என்‌ நாமகளை அகம்பால்‌ கொண்ட நான்முகனை நின்ற சசி பதியை நிலம்‌ கீண்டு எயில்‌ மூன்றெரித்த வென்று புலம்‌ துரந்த விசும்பாளியைக்‌ காணேனோ!

3399

ஆளியைக்‌ காண்பரியாய்‌ அரி காண்‌ நரியாய்‌ அரக்கர்‌ ஊளையிட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கொளிப்ப மீளியம்‌ புள்ளைக்‌ கடாய்‌ விறல்‌ மாலியைக்‌ கொன்று பின்னும்‌ ஆளுயர்‌ குன்றங்கள்‌ செய்து அடர்த்தானையும்‌ காண்டூுங்கொலோ?

3400

காண்டுங்கொலோ? நெஞ்சமே! கடிய வினையே முயலும்‌ ஆண்திறல்‌ மீளிமொய்ம்பின்‌ அரக்கன்‌ குலத்தைத்‌ தடிந்து மீண்டும்‌ அவன்‌ தம்பிக்கே விரிநீர்‌ இலங்கை அருளி ஆண்டு தன்‌ சோதி புக்க அமரர்‌ அரி ஏற்றினையே

3401

ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு ஆயர்‌ குலத்து ஈற்றிளம்‌ பிள்ளை ஒன்றாய்ப்‌ புக்கு மாயங்களே இயற்றி கூற்றியல்‌ கஞ்சனைக்‌ கொன்று ஐவர்க்காய்க்‌ கொடுஞ்சேனை தடிந்து ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்க அரியே

3402

புக்க அரியுருவாய்‌ அவுணன்‌ உடல்‌ கீண்டுகந்த சக்கரச்‌ செல்வன்‌ தன்னைக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன மிக்க ஹாயிரத்துள்‌ இவை பத்தும்‌ வல்லார்‌ அவரை தொக்குப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்வர்‌ ஏழையரே