Skip to the text
திருவாய்மொழி

7-5. கற்பார்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?" — இராமனைத் தவிர வேறு எதைக் கற்பார்கள் என்று கேட்கும் பதிகம். புல்லும் எறும்பும் தொடங்கி அனைத்து உயிர்களும் அவனை அடையும் என்று சொல்கிறார். கல்வியின் பொருள் என்ன என்பதற்கு ஒரு விடையாக இப்பதிகம் அமைகிறது.

திருவாய்மொழி 7-5 கற்பார்‌

3381

கற்பார்‌ இராம பிரானை அல்லால்‌ மற்றும்‌ கற்பரோ? புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பால்‌ அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌ நற்பாலுக்கு உய்த்தனன்‌ நான்முகனார்‌ பெற்ற நாட்டூளே

3382

நாட்டில்‌ பிறந்தவர்‌ நாரணற்கு ஆளன்றி யாவரோ? நாட்டில்‌ பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா நாட்டை நலியும்‌ அரக்கரை நாடித்‌ தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச்‌ செய்து நடந்தமை கேட்டூமே

3383

கேட்பார்கள்‌ கேசவன்‌ கீர்த்தி அல்லால்‌ மற்றும்‌ கேட்பரோ? கேட்பார்‌ செவிசுடு கீழ்மை வசவுகளே! வையும்‌ சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடி தாட்பால்‌ அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே

3384

தன்மை அறிபவர்‌ தாம்‌ அவற்கு ஆளன்றி யாவரோ? பன்மைப்‌ படர்பொருள்‌ ஆதுமில்‌ பாழ்‌ நெ௫டங்காலத்து நன்மைப்‌ புனல்‌ பண்ணி நான்முகனைப்‌ பண்ணி தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள்‌ சிந்தித்தே

3385

சூழல்கள்‌ சிந்திக்கில்‌ மாயன்‌ கழல்‌ அன்றிச்‌ சூழ்வரோ? ஆழப்‌ பெரும்புனல்‌ தன்னுள்‌ அழுந்திய ஞாலத்தை தாழப்படாமல்‌ தன்பால்‌ ஒரு கோட்டிடைத்‌ தான்‌ கொண்ட கேழல்‌ திருவுரு ஆயிற்றுக்‌ கேட்டும்‌ உணர்ந்துமே

3386

கேட்டும்‌ உணர்ந்தவர்‌ கேசவற்கு ஆளன்றி யாவரோ? வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டங்கொள்‌ தேவர்கள்‌ சென்று இரந்தார்க்கு இடர்‌ நீக்கிய கோட்டங்கை வாமனனாய்ச்‌ செய்த கூத்துக்கள்‌ கண்டுமே

3387

கண்டும்‌ தெளிந்தும்‌ கற்றார்‌ கண்ணற்கு ஆளன்றி யாவரோ? வண்டுண்‌ மலர்த்தொங்கல்‌ மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்‌ இண்டைச்‌ சடைமுடி ஈசனுடன்‌ கொண்டு உசாச்‌ செல்ல கொண்டங்குத்‌ தன்னொடும்‌ கொண்டு உடன்‌ சென்றது உணர்ந்துமே

3388

செல்ல உணர்ந்தவர்‌ செல்வன்‌ தன்‌ சீரன்றிக்‌ கற்பரோ? எல்லை இலாத பெரும்‌ தவத்தால்‌ பல செய்மிறை அல்லல்‌ அமரரைச்‌ செய்யும்‌ இரணியன்‌ ஆகத்தை மல்லல்‌ அரியுருவாய்ச்‌ செய்த மாயம்‌ அறிந்துமே

3389

மாயம்‌ அறிபவர்‌ மாயவற்கு ஆளன்றி யாவரோ? தாயம்‌ செறும்‌ ஒரு நூற்றுவர்‌ மங்க ஓர்‌ ஐவர்க்காய்‌ தேசம்‌ அறிய ஓர்‌ சாரதியாய்ச்‌ சென்று சேனையை நாசம்‌ செய்திட்டு நடந்த நல்வார்த்தை அறிந்துமே

3390

வார்த்தை அறிபவர்‌ மாயவற்கு ஆளன்றி யாவரோ? போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்‌ தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்றே

3391

தெளிவற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்‌ கதி செய்யும்‌ தெளிவுற்ற கண்ணனைத்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ தெளிவுற்ற ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ வல்லாரவர்‌ தெளிவுற்ற சிந்தையர்‌ பாமரு மூவுலகத்துள்ளே