Skip to the text
திருவாய்மொழி

7-3. வெள்ளைச்‌ சுரிசங்கு

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி, தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்றான்" — சங்கும் ஆழியும் ஏந்திய தாமரைக்கண்ணன் என் நெஞ்சுக்குள்ளேயே கருடனைச் செலுத்துகிறான் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் அனைத்தும் இப்போது உள்ளே நிகழ்கின்றன. உள்ளமே அவனுடைய ஊர்வலம் நடக்கும் தெருவாகிறது.

திருவாய்மொழி 7-3 வெள்ளைச்‌ சுரிசங்கு

3359

வெள்ளைச்‌ சுரிசங்கொடு ஆழி ஏந்தித்‌ தாமரைக்‌ கண்ணன்‌ என்‌ நெஞ்சினூடே புள்ளைக்‌ கடாகின்றவாற்றைக்‌ காணீர்‌ என்‌ சொல்லிச்‌ சொல்லுகேன்‌? அன்னைமீர்காள்‌! வெள்ளச்‌ சுகமவன்‌ விற்றிருந்த வேத ஒலியும்‌ விழா ஒலியும்‌ பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும்‌ அறாத்‌ திருப்பேரையில்‌' சேர்வன்‌ நானே

3360

நானக்‌ கருங்குழல்‌ தோழிமீர்காள்‌! அன்னையர்காள்‌! அயற்சேரியீர்காள்‌! நான்‌ இத்தனி நெஞ்சம்‌ காக்க மாட்டேன்‌ என்‌ வசம்‌ அன்றிது இராப்பகல்‌ போய்‌ ர தேன்‌ மொய்த்த பூம்பொழில்‌ தண்பணை சூழ்‌ தெந்திருப்பேரையில்‌ விற்றிருந்த வானப்பிரான்‌ மணிவண்ணன்‌ கண்ணன்‌ செங்கனிவாயின்‌ திறத்ததுவே

3361

செங்கனிவாயின்‌ திறத்ததாயும்‌ செஞ்சுடர்‌ நீள்முடித்‌ தாழ்ந்ததாயும்‌ சங்கொடு சக்கரம்‌ கண்டுகந்தும்‌ தாமரைக்‌ கண்களுக்கு அற்றுத்‌ தீர்ந்தும்‌ திங்களும்‌ நாளும்‌ விழா அறாத தென்திருப்பேரையில்‌ வீற்றிருந்த நங்கள்‌ பிரானுக்கு என்‌ நெஞ்சம்‌ தோழீ! நாணும்‌ நிரையும்‌ இழந்ததுவே

3362

இழந்த எம்மாமை திறத்துப்‌ போன என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே ஒழிந்தார்‌ உழந்து இனி யாரைக்‌ கொண்டு என்‌ உசாகோ? ஓதக்‌ கடல்‌ ஒலி போல எங்கும்‌ எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு தென்திருப்பேரையில்‌ விற்றிருந்த முழங்கு சங்கக்கையன்‌ மாயத்து ஆழ்ந்தேன்‌ அன்னையர்காள்‌! என்னை என்‌ முனிந்தே?

3363

முனிந்து சகடம்‌ உதைத்து மாயப்‌ பேய்‌ முலை உண்டு மருதிடை போய்‌ கனிந்த விளவுக்குக்‌ கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என்‌ பெண்மை தோற்றேன்‌ முனிந்து இனி என்‌ செய்தீர்‌? அன்னைமீர்காள்‌! திருப்பேரெயில்‌ என்று ஒவ்வொரு பாசுரத்திலும்‌ பாடமுண்டு முன்னி அவன்‌ வந்து விற்றிருந்த கனிந்த பொழில்‌ திருப்பேரையிற்கே காலம்‌ பெற என்னைக்‌ காட்டூமினே

3364

காலம்‌ பெற என்னைக்‌ காட்டூமின்கள்‌ காதல்‌ கடலின்‌ மிகப்‌ பெரிதால்‌ நீலமுகில்‌ வண்ணத்து எம்பெருமான்‌ நிற்கும்‌ முன்னே வந்து என்‌ கைக்கும்‌ எய்தான்‌ ஞாலத்து அவன்‌ வந்து விற்றிருந்த நான்மறையாளரும்‌ வேள்வியோவா கோலச்‌ செந்நெற்கள்‌ கவரி வீசும்‌ கூடு புனல்‌ திருப்பேரையிற்கே

3365

பேரெயில்‌ சூழ்‌ கடல்‌ தென்னிலங்கை செற்ற பிரான்‌ வந்து வீற்றிருந்த பேரையிற்கே புக்கு என்‌ நெஞ்சம்‌ நாடிப்‌ பேர்த்து வர எங்கும்‌ காண மாட்டேன்‌ ஆரை இனி இங்குடையம்‌? தோழீ! என்‌ நெஞ்சம்‌ கூவ வல்லாரும்‌ இல்லை ஆரை இனிக்‌ கொண்டு என்‌ சாதிக்கின்றது? என்‌ நெஞ்சம்‌ கண்டதுவே கண்டேனே

3366

கண்டதுவே கொண்டு எல்லாரும்‌ கூடிக்‌ கார்க்கடல்‌ வண்ணனோடு என்‌ திறத்துக்‌ கொண்டு அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்ட என்‌ காதல்‌ உரைக்கில்‌ தோழீ! மண்திணி ஞாலமும்‌ ஏழ்‌ கடலும்‌ நீள்விசும்பும்‌ கழியப்‌ பெரிதால்‌ தெண்திரை சூழ்ந்து அவன்‌ விற்றிருந்த தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே

3367

சேர்வன்‌ சென்று என்னுடைத்‌ தோழிமீர்காள்‌! அன்னையர்காள்‌! என்னைத்‌ தேற்ற வேண்டா நீர்கள்‌ உரைக்கின்றது என்‌ இதற்கு? நெஞ்சும்‌ நிறைவும்‌ எனக்கு இங்கில்லை கார்வண்ணன்‌ கார்க்கடல்‌ ஞாலம்‌ உண்ட கண்ணபிரான்‌ வந்து விற்றிருந்த ஏர்வள ஒண்கழனிப்‌ பழனத்‌ தென்திருப்பேரையின்‌ மாநகரே

3368

நகரமும்‌ நாடும்‌ பிறவும்‌ தேர்வேன்‌ நாண்‌ எனக்கில்லை என்‌ தோழிமீர்காள்‌! சிகரமணி நெடுமாட நீடு தென்திருப்பேரையில்‌ விற்றிருந்த மகர நெடூங்குழைக்‌ காதன்‌ மாயன்‌ நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில்‌ முகில்வண்ணன்‌ நேமியான்‌ என்‌ நெஞ்சம்‌ கவர்ந்து எனையூழியானே?

3369

ஊழிதோறூழி உருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையம்‌ காக்கும்‌ ஆழிநீர்‌ வண்ணனை அச்சுதனை அணிகுருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன ர்‌ கேழில்‌ அந்தாதி ஓராயிரத்துள்‌ இவை திருப்பேரையில்‌ மேய பத்தும்‌ ஆழியங்கையனை ஏத்த வல்லார்‌ அவர்‌ அடிமைத்‌ திறத்து ஆழியாரே