Skip to the text
திருவாய்மொழி

6-10. உலகமுண்ட

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!" — உலகையே உண்ட பெரிய வாயையுடையவனே, அழிவற்ற புகழுடையவனே என்று விளிக்கும் பதிகம். திருமாலிருஞ்சோலையை நோக்கிய இப்பதிகம் ஏக்கத்தின் உச்சத்தை எட்டுகிறது. ஆறாம் பத்து இந்த அழைப்புடன் நிறைவடைகிறது.

திருவாய்மொழி 6-10 உலகமுண்ட

3326

உலகமுண்ட பெருவாயா! உலப்பில்‌ கீர்த்தி அம்மானே! நிலவும்‌ சுடர்‌ சூழொளி மூர்த்தி! நெடியாய்‌! அடியேன்‌ ஆருயிரே! திலதம்‌ உலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குலதொல்‌ அடியேன்‌ உன பாதம்‌ கூடுமாறு கூறாயே

3327

கூறாய்‌ நீறாய்‌ நிலனாகிக்‌ கொடு வல்லசுரர்‌ குலம்‌ எல்லாம்‌ சீறா எறியும்‌ திருநேமி வலவா! தெய்வக்‌ கோமானே! சேறார்‌ சுனைத்‌ தாமரை செந்தீ மலரும்‌ திருவேங்கடத்தானே! ஆறா அன்பில்‌ அடியேன்‌ உன்‌ அடி சேர்‌ வண்ணம்‌ அருளாயே

3328

வண்ணம்‌ அருள்‌ கொள்‌ அணிமேக வண்ணா! மாய அம்மானே! எண்ணம்‌ புகுந்து தித்திக்கும்‌ அமுதே! இமையோர்‌ அதிபதியே! ர தெண்ணல்‌ அருவி மணி பொன்‌ முத்தலைக்கும்‌ திருவேங்கடத்தானே! அண்ணலே! உன்‌ அடி சேர அடியேற்கு ஆவா என்னாயே

3329

ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும்‌ அசுரர்‌ வாணாள்‌ மேல்‌ தீவாய்‌ வாளி மழை பொழிந்த சிலையா! திருமாமகள்‌ கேள்வா! தேவா! சுரர்கள்‌ முனிக்‌ கணங்கள்‌ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! பூவார்‌ கழல்கள்‌ அருவினையேன்‌ பொருந்துமாறு புணராயே

3330

புணரா நின்ற மரம்‌ ஏழ்‌ அன்றெய்த ஒரு வில்‌ வலவாவோ! புணரேய்‌ நின்ற மரம்‌ இரண்டின்‌ நடுவே போன முதல்வாவோ! திணரார்‌ மேகம்‌ எனக்‌ களிறு சேரும்‌ திருவேங்கடத்தானே! திணரார்‌ சார்ங்கத்து உன பாதம்‌ சேர்வதடியேன்‌ எந்நாளே?

3331

எந்நாளே? நாம்‌ மண்‌ அளந்த இணைத்‌ தாமரைகள்‌ காண்பதற்க்கென்று எந்நாளும்‌ நின்று இமையோர்கள்‌ ஏத்தி இறைஞ்சி இனம்‌ இனமாய்‌ மெய்‌ நா மனத்தால்‌ வழிபாடு செய்யும்‌ திருவேங்கடத்தானே! மெய்‌ நான்‌ எய்தி எந்நாள்‌ உன்‌ அடிக்கண்‌! அடியேன்‌ மேவுவதே?

3332

அடியேன்‌ மேவி அமர்கின்ற அமுதே! இமையோர்‌ அதிபதியே! கொடுயாவடு புள்ளுடையானே! கோலக்‌ கனிவாய்ப்‌ பெருமானே! செடியார்‌ வினைகள்‌ தீர்‌ மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! நொடுயார்‌ பொழுதும்‌ உன பாதம்‌ காண நோலாதாற்றேனே

3333

நோலாதாற்றேன்‌ உன பாதம்‌ காண என்று நுண்ணுணர்வின்‌ நீலார்‌ கண்டத்து அம்மானும்‌ நிறை நான்முகனும்‌ இந்திரனும்‌ சேலேய்‌ கண்ணார்‌ பலர்‌ சூழ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! மாலாய்‌ மயக்கி அடியேன்‌ பால்‌ வந்தாய்‌ போலே வாராயே

3334

வந்தாய்‌ போலே வாராதாய்‌ வாராதாய்‌ போல்‌ வருவானே! 7? அடியோர்க்கு செந்தாமரைக்கண்‌ செங்கனிவாய்‌ நால்தோள்‌ அமுதே! எனதுயிரே சிந்தாமணிகள்‌ பகர்‌ அல்லைப்‌ பகல்‌ செய்‌ திருவேங்கடத்தானே! அந்தோ! அடியேன்‌ உன பாதம்‌ அகலகில்லேன்‌ இறையுமே

3335

அகலகில்லேன்‌ இறையும்‌ என்று அலர்மேல்‌ மங்கை உறை மார்பா! நிகரில்‌ புகழாய்‌! உலகம்‌ மூன்றுடையாய்‌! என்னை ஆள்வானே! ர நிகரில்‌ அமரர்‌ முனிக்‌ கணங்கள்‌ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! புகல்‌ ஒன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்‌ கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே

3336

அடிக்‌ கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌! வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌ படிக்‌ கேழில்லாப்‌ பெருமானைப்‌ பழனக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ முடிப்பான்‌ சொன்ன ஆயிரத்துத்‌ திருவேங்கடத்துக்கு இவை பத்தும்‌ பிடித்தார்‌ பிடித்தார்‌ வீற்றிருந்து பெரிய வானுள்‌ நிலாவுவரே