Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-1. கதிராயிரம்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"இராமன் இருக்குமிடம் தேடுகிறீர்களா?" என்று கேட்டு, திருமாலிருஞ்சோலையைச் சுட்டிக்காட்டும் பதிகம். ஆயிரம் கதிர்கள் ஒன்றாய் எரிவது போன்ற நீள்முடியன், நிகரற்ற பெருமையுடையவன் என்று அவனை வருணித்து, ஒவ்வொரு பாசுரமும் அந்த மலையிலேயே முடிகிறது. பேயின் முலையுண்டவன், மாமணி வண்ணன் — யாரைத் தேடினாலும் சென்று சேர வேண்டிய இடம் ஒன்றுதான் என்கிறார்.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-1 கதிராயிரம்‌ (ஸர்வேஸ்வரனைக்‌ காண வேணுமென்று தேடுவார்‌ சிலரும்‌, கண்டார்‌ சிலருமாகக்‌ கூறுதல்‌)

328

1 கதிராயிரம்‌ இரலி கலந்தெரித்தால்‌ ஒத்த நீள்‌ முடியன்‌ எதிரில்‌ பெருமை இராமனை இருக்குமிடம்‌ நாடுதிரேல்‌ அதிரும்‌ கழற்பொரு தோள்‌ இரணியன்‌ ஆகம்‌ பிளந்து அரியாய்‌ உதிரம்‌ அளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்‌

329

நாந்தகம்‌ சங்கு தண்டு நாணொலிச்‌ சார்ங்கம்‌ திருச்சக்கரம்‌ ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம்‌ நாடுதிரேல்‌ காந்தள்‌ முகிழ்‌ விரல்‌ சீதைக்காகிக்‌ கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர்‌ தலைவன்‌ சனக ராசன்‌ தன்‌ வேள்வியில்‌ கண்டாருளர்‌

330

கொலை யானைக்‌ கொம்பு பறித்துக்‌ கூடலர்‌ சேனை பொருதழிய சிலையால்‌ மராமரம்‌ எய்த தேவனைச்‌ சிக்கென நாடுதிரேல்‌ தலையால்‌ குரக்கினம்‌ தாங்கிச்‌ சென்று தடவரை கொண்டடைப்ப அலையார்‌ கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக்‌ கண்டாருளர்‌

331

தோயம்‌ பரந்த நடூவு சூழலில்‌ தொல்லை வடிவு கொண்ட மாயக்‌ குழவியதனை நாறுறில்‌ வம்மின்‌ சுவடூுரைக்கேன்‌ ஆயர்‌ மடமகள்‌ பின்னைக்காகி அடல்விடை ஏழினையும்‌ வியப்‌ பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்‌

332

நீரேறு செஞ்சடை நீலகண்டனும்‌ நான்முகனும்‌ முறையால்‌ சீரேறு வாசகஞ்செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்‌ வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப்‌ பிடித்துக்‌ கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர்‌ செய்யச்‌ சிக்கெனக்‌ கண்டாருளர்‌

333

பொல்லா வடிவுடைப்‌ பேய்ச்சி துஞ்சப்‌ புணர்‌ முலை வாய்‌ மடுக்க வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம்‌ நாடுதிரேல்‌ பல்லாயிரம்‌ பெருந்தேவிமாரொடு பெளவம்‌ ஏறிதுவரை எல்லாரும்‌ சூழச்‌ சிங்காசனத்தே இருந்தானைக்‌ கண்டாருளர்‌

334

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்‌ திருச்‌ சக்கரம்‌ ஏந்து கையன்‌ உள்ளவிடம்‌ வினவில்‌ உமக்கு இறைவம்மின்‌ சுவடூுரைக்கேன்‌ வெள்ளைப்‌ புரவிக்‌ குரக்கு வெல்கொடுத்‌ தேர்மிசை முன்பு நின்று கள்ளப்‌ படைத்‌ துணையாகிப்‌ பாரதம்‌ கைசெய்யக்‌ கண்டாருளர்‌

335

நாழிகை கூறிட்டுக்‌ காத்து நின்ற அரசர்கள்‌ தம்முகப்பே நாழிகை போகப்‌ படை பொருதவன்‌ தேவகி தன்‌ சிறுவன்‌ ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்‌ சயத்திரதன்‌ தலையை பாழிலுருளப்‌ படை பொருதவன்‌ பக்கமே கண்டாருளர்‌

336

மண்ணும்‌ மலையும்‌ மறிகடல்களும்‌ மற்றும்‌ யாவுமெல்லாம்‌ திண்ணம்‌ விழுங்கி உமிழ்ந்த தேவனைச்‌ சிக்கென நாடுதிரேல்‌ எண்ணற்கரியதோர்‌ ஏனமாகி இருநிலம்‌ புக்கிடந்து வண்ணக்‌ கருங்குழல்‌ மாதரோடு மணந்தானைக்‌ கண்டாருளர்‌

337

கரியமுகில்‌ புரைமேனி மாயனைக்‌ கண்ட சுவடுரைத்து புரவிமுகம்‌ செய்து செந்நெலோங்கி விளைகழனிப்‌ புதுவை திருவிற்பொலி மறைவாணன்‌ பட்டர்‌ பிரான்‌ சொன்ன மாலை பத்தும்‌ பரவு மனமுடைப்‌ பத்தருள்ளார்‌ பரமனடி சேர்வர்களே