திருவாய்மொழி 6-7 உண்ணும்சோறு
6-7. உண்ணும்சோறு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" — உண்ணும் உணவும், குடிக்கும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று சொல்லும் பதிகம். வாழ்வின் மிக அன்றாடமான மூன்று செயல்களை எடுத்து, அவை அனைத்தும் அவனே என்று சொல்வதன் மூலம் தனித்த வழிபாட்டு நேரம் என்பதே இல்லாமல் ஆகிறது. திருவாய்மொழியின் மிகப் பிரபலமான வரிகளுள் ஒன்று இது.
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி ர மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்க அவனூர் வினவி திண்ணம் என் இளமான் புகுழூர் திருக்கோளூரே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வானிடறி சேரும் நல்வளஞ்சேர் பழனத் திருகோளூர்க்கே போருங்கொல்? உரையீர் கொடியேன் கொடி பூவைகளே!
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவியெழும் என் பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?
கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ? சில்லை வாய்ப் பெண்டுகள் அயற் சேரியுள்ளாரும் எல்லே! ர செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள் என் சிறுத் தேவி போய் இனித்தன் திருமால் திருக்கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு ஆவியுள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய் தென்திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடூங்கண்கள் பனி மல்கவே
மல்கு நீர்க்கண்ணொடு மையலுற்ற மனத்தனளாய் அல்லும் நன்பகலும் நெடுமால் என்றழைத்து இனிப் போய் செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஓசிந்தே?
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணீர் துளும்பச் செல்லுங்கொல்? ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய் சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடூங்கண் இளமான் இனிப் போய் அனைத்துலகும் உடைய அரவிந்தலோசனனை தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே
வைத்த மாநிதியாம் மதுசூதனையே அலற்றி கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே