Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-10. நெறிந்த கருங்குழல்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

இராம கதையை ஒரு விண்ணப்பமாக ஆழ்வார் பாடுகிறார். சனகன் வில்லை முறித்து உன்னைக் கொணர்ந்ததை அறிவேன் என்று தொடங்கி, சித்திரகூடத்தில் காக்கையின் குற்றத்திற்குக் கூட அத்திரம் தொடுத்ததை நினைவுபடுத்துகிறார். "வித்தகனே இராமா, நின் அபயம்" என்று சரணடைகிறார். கதையைச் சொல்வதுபோலவே தன்னைக் காப்பாற்றக் கேட்கும் தொனி இப்பதிகத்தில் ஓடுகிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-10 நெறிந்த கருங்குழல்‌ (இலங்கைக்குத்‌ தூது சென்ற திருவடி, பிராட்டியைக்‌ கண்டு, சக்ரவர்த்தித்‌ திருமகன்‌ கூறிய சில அடையாளங்களைக்‌ கூறிக்‌ கணையாழி கொடுத்து களிப்பித்தல்‌)

318

நெறிந்த கருங்குழல்‌ மடவாய்‌ நின்னடியேன்‌ விண்ணப்பம்‌ செறிந்த மணிமுடிச்‌ சனகன்‌ சிலையிறுத்து நினைக்‌ கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன்‌ இடைவிலங்க செறிந்தசிலை கொடுதவத்தைச்‌ சிதைத்ததும்‌ ஓரடையாளம்‌

319

அல்லியம்‌ பூமலர்க்‌ கோதாய்‌ அடிபணிந்தேன்‌ விண்ணப்பம்‌ சொல்லுகேன்‌ கேட்டருளாய்‌ துணைமலர்க்கண்‌ மடமானே எல்லியம்போது இனிதிருத்தல்‌ இருந்ததோர்‌ இடவகையில்‌ மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்‌ ஓரடையாளம்‌

320

கலக்கிய மாமனத்தளளாய்க்‌ கைகேசி வரம்‌ வேண்ட மலக்கிய மாமனத்தனனாய்‌ மன்னவனும்‌ மறாதொழிய குலக்குமரா காடூறையப்‌ போ என்று விடை கொடுப்ப இலக்குமணன்‌ தன்னொடும்‌ அங்கேகியது ஓரடையாளம்‌

321

வாரணிந்த முலைமடவாய்‌ வைதேவி விண்ணப்பம்‌ தேரணிந்த அயோத்தியர்‌ கோன்‌ பெருந்தேவி கேட்டருளாய்‌ கூரணிந்த வேல்வலவன்‌ குகனோடும்‌ கங்கை தன்னில்‌ சீரணிந்த தோழமை கொண்டதும்‌ ஓரடையாளம்‌ (க)

322

மானமெரு மெந்நோக்கி வைதேவீ விண்ணப்பம்‌ கானமரும்‌ கல்லதர்‌ போய்க்‌ காடூறைந்த காலத்து தேனமரும்‌ பொழிற்‌ சாரல்‌ சித்திரகூடத்து இருப்ப பால்மொழியாய்‌ பரதநம்பி பணிந்ததும்‌ ஓரடையாளம்‌

323

சித்திரகூடத்திருப்பச்‌ சிறுகாக்கை முலைதீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும்‌ திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்‌அபயம்‌ என்றழைப்ப அத்திரமே அதன்‌ கண்ணை அறுத்ததும்‌ ஓரடையாளம்‌

324

மின்னொத்த நுண்ணிடையாய்‌ மெய்யடியேன்‌ விண்ணப்பம்‌ பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்‌அன்பின்‌ வழி நின்று சிலை பிடித்து எம்பிரான்‌ ஏக பின்னே அங்கு இலக்குமணன்‌ பிரிந்ததும்‌ ஓரடையாளம்‌

325

மைத்தகு மாமலர்க்‌ குழலாய்‌ வைதேவி விண்ணப்பம்‌ ஒத்தபுகழ்‌ வானரக்கோன்‌ உடனிருந்து நினைத்‌ தேட அத்தகுசீர்‌ அயோத்தியர்‌ கோன்‌ அடையாளமிவை மொழிந்தான்‌ இத்தகையால்‌ அடையாளம்‌ ஈதவன்‌ கைம்‌ மோதிரமே

326

திக்குநிறை புகழாளன்‌ தீவேள்விச்‌ சென்ற நாள்‌ மிக்க பெருஞ்சபை நடுவே வில்லிறுத்தான்‌ மோதிரம்‌ கண்டு ஒக்குமால்‌ அடையாளம்‌ அநுமான்‌ என்று உச்சிமேல்‌ வைத்துக்‌ கொண்டு உகந்தனளால்‌ மலர்க்குழலாள்‌ சீதையுமே

327

வாராரும்‌ முலைமடவாள்‌ வைதேவி தனைக்கண்டு சீராறும்‌ திறலனுமன்‌ தெரிந்துரைத்த அடையாளம்‌ பாராரும்‌ புகழ்ப்புதுவைப்‌ பட்டர்பிரான்‌ பாடல்‌ வல்லார்‌ எராரும்‌ வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே