Skip to the text
திருவாய்மொழி

6-2. மின்னிடைமடவார்கள்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அஞ்சுவன்" — உன் அருளைப் பெற்ற மங்கையர் முன்னால் நிற்க நான் அஞ்சுகிறேன் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். இறைவனிடம் அல்ல, அவனுடையவர்களிடமே அச்சம் கொள்ளும் நிலை இது. தன்னைத் தாழ்வாக மதிப்பிடும் மனநிலையின் நுட்பமான வெளிப்பாடு.

திருவாய்மொழி 6-2 மின்னிடைமடவார்கள்‌

3238

மின்னிடை மடவார்கள்‌ நின்னருள்‌ சூடுவார்‌ முன்பு நான்‌ அதஞ்சுவன்‌ மன்னுடை இலங்கை அரண்‌ காய்ந்த மாயவனே! ர உன்னுடைய சுண்டாயம்‌ நான்‌ அறிவன்‌ இனி அது கொண்டு - செய்வதென்‌? என்னுடைய பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ!

3239

போகு நம்பீ! உன்‌ தாமரை புரை கண்ணிணையும்‌ செவ்வாய்‌ முறுவலும்‌ ஆகுலங்கள்‌ செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்‌? தோகைமா மயிலார்கள்‌ நின்னருள்‌ சூடூவார்‌ செவியோசை வைத்தெழ ஆகள்‌ போக விட்டுக்‌ குழலூது போயிருந்தே

3240

போயிருந்து நின்‌ புள்ளுவம்‌ அறியாதவர்க்கு உரை நம்பீ! நின்‌ செய்ய வாயிருங்கனியும்‌ கண்களும்‌ விபரீதம்‌ இந்நாள்‌ வேயிருந்தடந்தோளினார்‌ இத்திருவருள்‌ பெறுவார்‌ யவர்‌ கொல்‌? மாயிருங்கடலைக்‌ கடைந்த பெருமானாலே

3241

ஆலினீளிலை ஏழுலகம்‌ உண்டு அன்று நீ கிடந்தாய்‌ உன்‌ மாயங்கள்‌ மேலை வானவரும்‌ அறியார்‌ இனி எம்‌ பரமே? வேலினேர்‌ தடங்கண்ணினார்‌ விளையாடு சூழலைச்‌ சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்‌! எம்மை நீ கழறேலே

3242

கழறேல்‌ நம்பீ! உன்‌ கைதவம்‌ மண்ணும்‌ விண்ணும்‌ நன்கறியும்‌ திண்‌ சக்கர நிழறு தொல்‌ படையாய்‌! உனக்கு ஒன்று உணர்த்துவன்‌ நான்‌ மழறு தேன்‌ மொழியார்கள்‌ நின்னருள்‌ சூடூவார்‌ மனம்‌ வாடு நிற்க எம்‌ குழறு பூவையொடும்‌ கிளியோடும்‌ குழகேலே

3243

குழகி எங்கள்‌ குழமணன்‌ கொண்டு கோயின்மை செய்து கன்மம்‌ - ஒன்றில்லை பழகி யாம்‌ இருப்போம்‌ பரமே இத்திருவருள்கள்‌? அழகியார்‌ இவ்வுலக மூன்றுக்கும்‌ தேவிமை தகுவார்‌ பலருளர்‌ கழகமேறேல்‌ நம்பீ! உனக்கும்‌ இளைதே கன்மமே

3244

கன்மம்‌ அன்று எங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது கடல்‌ ஞாலம்‌ உண்டிட்ட நின்மலா! நெடியாய்‌! உனக்கேலும்‌ பிழை பிழையே வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில்‌ என்னைமார்‌ தன்ம பாவம்‌ என்னார்‌ ஒரு நான்று தடிபிணக்கே

3245

பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர்‌ ஞான மூர்த்தியினாய்‌! இஇணக்கி எம்மை எம்‌ தோழிமார்‌ விளையாடப்‌ போதுமின்‌ என்னப்‌ - போந்தோமை உணக்கி நீ வளைத்தால்‌ என்‌ சொல்லார்‌ உகவாதவரே!

3246

உகவையால்‌ நெஞ்சம்‌ உள்ளுருகி உன்‌ தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்படுப்பான்‌ அழித்தாய்‌ உன்‌ திருவடியால்‌ ர்‌ தகவு செய்திலை எங்கள்‌ சிற்றிலும்‌ யாமடு சிறுசோறும்‌ கண்டு நின்‌ முகவொளி திகழ முறுவல்‌ செய்து நின்றிலையே

3247

நின்றிலங்கு முடியினாய்‌! இருபத்தோர்கால்‌ அரசு களை கட்ட வென்றி நீள்மழுவா! வியன்‌ ஞாலம்‌ முன்‌ படைத்தாய்‌! ர இன்று இவ்வாயர்‌ குலத்தை வீடூய்யத்‌ தோன்றிய கருமாணிக்கச்‌ சுடர்‌! நின்‌ தன்னால்‌ நலிவே படுவோம்‌ என்றும்‌ ஆய்ச்சியோமே

3248

ஆய்ச்சியாகிய அன்னையால்‌ அன்று வெண்ணெய்‌ வார்த்தையுள்‌ - கூத்த அப்பன்‌ தன்னைக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஏத்திய தமிழ்‌ மாலை ஆயிரத்துள்‌ இவையுமோர்‌ பத்து இசையொடும்‌ நாத்தன்னால்‌ நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே