Skip to the text
திருவாய்மொழி

6-1. வைகல்பூங்கழி

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!" — கழிமுகத்தில் மேயும் நாரைக் கூட்டங்களே என்று விளித்துத் தூது அனுப்பும் பதிகம். திருவண்வண்டூரில் உள்ளவனிடம் தன் நிலையைச் சொல்லுமாறு வேண்டுகிறாள். பறவைகளிடம் பேசுவது இப்போது வழக்கமாகிவிட்டது — மனிதர் புரிந்துகொள்ளாத ஒன்றை அவை புரிந்துகொள்வதுபோல.

திருவாய்மொழி 6-1 வைகல்பூங்கழி

3227

வைகல்‌ பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌! செய்கொள்‌ செந்நெல்‌ உயர்‌ திருவண்வண்டூர்‌ உறையும்‌ கைகொள்‌ சக்கரத்து என்‌ கனிவாய்‌ பெருமானைக்‌ கண்டு கைகள்‌ கூப்பிச்‌ சொல்லீர்‌ வினையாட்டியேன்‌ காதன்மையே

3228

காதல்‌ மென்பெடையோடு உடன்‌ மேயும்‌ கருநாராய்‌! வேத வேள்வி ஒலி முழங்கும்‌ தண்‌ திருவண்வண்டூர்‌ நாதன்‌ ஞாலம்‌ எல்லாம்‌ உண்ட நம்‌ பெருமானைக்‌ கண்டு பாதம்‌ கை தொழுது பணியீர்‌ அடியேன்‌ திறமே

3229

திறங்களாகி எங்கும்‌ செய்களூடூழல்‌ புள்ளினங்காள்‌! சிறந்த செல்வம்‌ மல்கு திருவண்வண்டூர்‌ உறையும்‌ கறங்கு சக்கரக்‌ கைக்‌ கனிவாய்ப்‌ பெருமானைக்‌ கண்டு இறங்கி நீர்‌ தொழுது பணியீர்‌ அடியேன்‌ இடரே

3230

இடரில்‌ போகம்‌ மூழ்கி இணைந்தாடும்‌ மடவன்னங்காள்‌! விடலில்‌ வேத ஒலி முழங்கும்‌ தண்‌ திருவண்வண்டூர்‌ கடலில்‌ மேனிப்‌! பிரான்‌ கண்ணணை நெடுமாலைக்‌ கண்டு உடலம்‌ நைந்து ஒருத்தி உருகும்‌ என்று உணர்த்துமினே

3231

உணர்த்தல்‌ ஊடல்‌ உணர்ந்து உடன்‌ மேயும்‌ மடவன்னங்காள்‌! திணர்த்த வண்டல்கள்‌ மேல்‌ சங்கு சேரும்‌ திருவண்வண்டூர்‌ புணர்த்த பூந்தண்‌ துழாய்‌ முடி நம்‌ பெருமானைக்‌ கண்டு புணர்த்த கையினராய்‌ அடியேனுக்கும்‌ போற்றுமினே

3232

போற்றி யான்‌ இரந்தேன்‌ புன்னை மேல்‌ உறை பூங்குயில்காள்‌! சேற்றில்‌ வாளை துள்ளும்‌ திருவண்வண்டூர்‌ உறையும்‌ ஆற்றல்‌ ஆழியங்கை அமரர்‌ பெருமானைக்‌ கண்டு மாற்றம்‌ கொண்டருளீர்‌ மையல்‌ தீர்வதொரு வண்ணமே

3233

ஒருவண்ணம்‌ சென்று புக்கு எனக்கு ஒன்றுரை ஒண்கிளியே! செருவொண்‌ பூம்பொழில்‌ சூழ்‌ செக்கர்‌ வேலைத்‌ திருவண்வண்டூர்‌ கருவண்ணம்‌ செய்யவாய்‌ செய்யகண்‌ செய்யகை செய்யகால்‌ செருவொண்‌ சக்கரம்‌ சங்கு அடையாளம்‌ திருந்தக்‌ கண்டே

3234

திருந்தக்‌ கண்டு எனக்கொன்று உரையாய்‌ ஒண்சிறுபூவாய்‌! செருந்தி ஞாழல்‌ மகிழ்‌ புன்னை சூழ்‌ தண்‌ திருவண்வண்டூர்‌ ர பெருந்தண்‌ தாமரைக்‌ கண்‌ பெருநீள்முடி நால்தடந்தோள்‌ கருந்திண்‌ மாமுகில்‌ போல்‌ திருமேனி அடிகளையே

3235

அடிகள்‌ கை தொழுது அலர்மேல்‌ அசையும்‌ அன்னங்காள்‌! விடிவை சங்கொலிக்கும்‌ திருவண்வண்டூர்‌ உறையும்‌ கடிய மாயன்‌ தன்னைக்‌ கண்ணனை நெடூமாலைக்‌ கண்டு கொடிய வல்வினையேன்‌ திறம்‌ கூறுமின்‌ வேறு கொண்டே

3236

வேறு கொண்டு உம்மை யான்‌ இரந்தேன்‌ வெறி வண்டினங்காள்‌! ! கடலின்‌ மேனி/கடல மேனி தேறுநீர்ப்‌ பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டூர்‌ மாறில்‌ போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளள்‌ என்மின்களே

3237

மின்கொள்‌ சேர்‌ புரிநூல்‌ குறளாய்‌ அகல்‌ ஞாலம்‌ கொண்ட வன்கள்வன்‌ அடி மேல்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன பண்கொள்‌ ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ திருவண்வண்டூர்க்கு இஇன்கொள்‌ பாடல்‌ வல்லார்‌ மதனர்‌ மின்னிடையவர்க்கே