திருவாய்மொழி 5-9 மானேய்நோக்கு
5-9. மானேய்நோக்கு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய" — மான் போன்ற பார்வையுடைய தோழியரே, நாள்தோறும் நான் மெலிகிறேன் என்று தலைவி சொல்லும் பதிகம். கமுகும் மல்லிகையும் நிறைந்த சூழல் அவளுக்கு ஆறுதலாக அல்ல, வேதனையாகவே இருக்கிறது. மற்றவர்கள் அழகு காணும் இடத்தில் அவள் வலியையே காண்கிறாள்.
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய வானார் வண்கமுகும் மதுமல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடிகூடுவது என்று கொலோ?
என்று கொல்? தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? பொன் திகழ் புன்னை மகிழ் புதுமாதவி மீதணவி ர தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடூவதே
சூடுமலர்க் குழலீர்! துயராட்டுயேனை மெலிய பாடு நல்வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க ர மாடுயர்ந்து ஹப்புகை கமழும் தண்திருவல்லவாழ் நீடுறைகின்ற பிரான் கழல் கண்டூங்கொல் நிச்சலுமே?
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? பச்சிலை நீள்கழுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீதணவும் தண்திருவல்லவாழ் நச்சரவினணை மேல் நம்பிரானது நன்னலமே
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை மைந்நலம் கொண்டு உயர்விண் மறைக்கும் தண்திருவல்லவாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை என்னலங்கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே?
காண்பது எஞ்ஞான்று கொலொ? வினையேன் கனிவாய் மடவீர்! பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேண்சினை ஜங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ் மாண்குறள் கோலப் பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்! ஓத நெடுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ் நாதன் இஞ்ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாள்தோறுமே
நாள்தொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நல்நுதலீர்! ஆரூறுதீங்கரும்பும் விளை செந்நெலுமாகி எங்கும் ர மாறடூறு பூந்தடம் சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ் நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே
கழல்வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ? குழல் என்ன யாழும் என்னக் குளிர்சோலையுள் தேனருந்தி மழலை வரிவண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்! தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ் நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ் சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே