Skip to the text
திருவாய்மொழி

5-8. ஆராவமுதே

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற" — தெவிட்டாத அமுதே, என் உடலையே நீராக்கி உருக்குகிறாயே என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். இன்பம் தாங்க முடியாத அளவுக்குச் செல்லும் நிலை இது. இனிமையே ஒரு வகைத் துன்பமாக மாறும் எல்லையை இப்பதிகம் தொடுகிறது.

திருவாய்மொழி 5-8 ஆராவமுதே

3194

ஆராவழுதே! அடியேன்‌ உடலம்‌! நின்பால்‌ அன்பாயே நீராய்‌ அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே! சீரார்‌ செந்நெல்‌ கவரி வீசும்‌ செழுநீர்த்‌ திருக்குடந்தை ஏரார்‌ கோலம்‌ திகழக்‌ கிடந்தாய்‌! கண்டேன்‌ எம்மானே!

3195

எம்மானே! என்‌ வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும்‌ வேண்டுமாற்றால்‌ ஆவாய்‌! எழிலேறே! ர்‌ செம்மா கமலம்‌ செழுநீர்‌ மிசைக்‌ கண்மலரும்‌ திருக்குடந்தை அம்மா மலர்க்‌ கண்‌ வளர்கின்றானே! என்‌ நான்‌ செய்கேனே!

3196

என்‌ நான்‌ செய்கேன்‌? யாரே களைகண்‌? என்னை என்‌ செய்கின்றாய்‌? உன்னால்‌ அல்லால்‌ யாவராலும்‌ ஒன்றும்‌ குறை வேண்டேன்‌ ர்‌ கன்னார்‌ மதிள்‌ சூழ்‌ குடந்தைக்‌ கிடந்தாய்‌! அடியேன்‌ அருவாணாள்‌ செந்நாள்‌ எந்நாள்‌? அந்நாள்‌ உனதாள்‌ பிடித்தே செலக்‌ காணே

3197

செலக்காண்‌ கிற்பார்‌ காணும்‌ அளவும்‌ செல்லும்‌ கீர்த்தியாய்‌! உலப்பிலானே! எல்லா உலகும்‌ உடைய ஒரு மூர்த்தி! ச்‌ நலத்தால்‌ மிக்கார்‌ குடந்தைக்‌ கிடந்தாய்‌! உன்னைக்‌ காண்பான்‌ நான்‌ அலப்பாய்‌ ஆகாசத்தை நோக்கி அழுவன்‌ தொழுவனே

3198

அழுவன்‌ தொழுவன்‌ ஆடிக்‌ காண்பன்‌ பாடி அலற்றுவன்‌ தழுவல்‌ வினையால்‌ பக்கம்‌ நோக்கி நாணிக்‌ கவிழ்ந்திருப்பன்‌ செழு ஒண்‌ பழனக்‌ குடந்தைக்‌ கிடந்தாய்‌! செந்தாமரைக்‌ கண்ணா! தொழுவனேனை உன தாள்‌ சேரும்‌ வகையே சூழ்‌ கண்டாய்‌

3199

சூழ்‌ கண்டாய்‌ என்‌ தொல்லை வினையை அறுத்து உன்னடி சேரும்‌ ஊழ்‌ கண்டிருந்தே தூராக்‌ குழி தூர்த்து எனை நாள்‌ அகன்றிருப்பன்‌? வாழ்‌ தொல்‌ புகழார்‌ குடந்தைக்‌ கிடந்தாய்‌! வானோர்‌ கோமானே! யாழின்‌ இசையே! அழுதே! அறிவின்‌ பயனே! அரியேறே!

3200

அரியேறே! என்‌ அம்பொற்‌ சுடரே! செங்கண்‌ கரு முகிலே! எரியே! பவளக்‌ குன்றே! நால்‌ தோள்‌ எந்தாய்‌! உனதருளே பிரியா அடிமை என்னைக்‌ கொண்டாய்‌! குடந்தைத்‌ திருமாலே! தரியேன்‌ இனி உன்‌ சரணம்‌ தந்து என்‌ சன்மம்‌ களையாயே

3201

களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களைகண்‌ மற்றிலேன்‌ வளைவாய்‌ நேமிப்‌ படையாய்‌! குடந்தைக்‌ கிடந்த மாமாயா! தளரா உடலம்‌ எனதாவி சரிந்து போம்போது இளையாது உனதாள்‌ ஒருங்கப்‌ பிடித்து போத இசை நீயே

3202

இசைவித்து என்னை உன்‌ தாள்‌ இணைக்‌ கீழ்‌ இருத்தும்‌ அம்மானே! அசைவில்‌ அமரர்‌ தலைவர்‌ தலைவா! ஆதிப்‌ பெரு மூர்த்தி! திசைவில்‌ வீசும்‌ செழுமாமணிகள்‌ சேரும்‌ திருக்குடந்தை அசைவில்‌ உலகம்‌ பரவக்‌ கிடந்தாய்‌! காண வாராயே

3203

வாரா வருவாய்‌ வருமென்‌ மாயா! மாயா மூர்த்தியாய்‌! ஆரா அழுதாய்‌ அடியேன்‌ ஆவி அகமே தித்திப்பாய்‌ தீரா வினைகள்‌ தீர என்னை ஆண்டாய்‌! திருக்குடந்தை ஊரா! உனக்காட்பட்டூம்‌ அடியேன்‌ இன்னம்‌ உழல்வேனோ?

3204

உழலையென்பின்‌ பேய்ச்சி முலையூடு அவளை உயிர்‌ உண்டான்‌ கழல்கள்‌ அவையே சரணாகக்‌ கொண்ட குருகூர்ச்‌ சடகோபன்‌ குழலின்‌ மலியச்‌ சொன்ன ஜராயிரத்துள்‌ இப்பத்தும்‌ மழலை தீர வல்லார்‌ காமர்‌ மானேய்‌ நோக்கியர்க்கே