திருவாய்மொழி 5-7 நோற்ற நோன்பு
5-7. நோற்ற நோன்பு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்" — விரதமும் இல்லை, நுட்பமான அறிவும் இல்லை; ஆயினும் உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று சொல்லும் பதிகம். தகுதி எதுவும் இல்லாமல் உரிமை கோரும் இடம் இது. இல்லாதவற்றை ஒப்புக்கொண்டபின், இருப்பது ஒன்றே — விட முடியாமை.
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன் அரவினணை அம்மானே! ர் சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர் வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே! திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகர் உறை சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே
கருளப் புட்கொடு சக்கரப் படை வான நாட! என் கார்முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே
மாறுசேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி இவையொரு நீறு செய்த எந்தாய்! நிலங் கீண்ட அம்மானே! தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கல நகர் ஏறி விற்றிருந்தாய்! உன்னை எங்கெய்தக் கூவுவனே?
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெவ்வத்துளாயுமாய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே! ர் செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கல நகர் கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே
ஏனமாய் நிலங் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் என்னை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை வானமாமலையே! அடியேன் தொழ வந்தருளே
வந்தருளி என் நெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் உலகும் உண்டாய் செந்தொழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் ஆமவை நன்கறிந்தனன் அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய் பகற் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும் புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் உனக்கோர் கைம் மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசை கொய் கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே