திருவாய்மொழி 5-6 கடல்ஞாலம்
5-6. கடல்ஞாலம்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்; கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்" — கடல் சூழ்ந்த உலகைப் படைத்ததும் நானே, அவ்வுலகமாய் ஆனதும் நானே என்று இறைவனே பேசுவதுபோல் அமைந்த பதிகம். ஆழ்வார் தன் மகளிடம் இறைவன் புகுந்து பேசுவதாகத் தாய் சொல்லும் பாவனை இது. படைத்தவனும் படைப்பும் ஒன்றே என்னும் கருத்து ஒரு நாடகக் காட்சியாக மாறுகிறது.
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும் கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும் மெய்கொள் கடல்ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ? கடல்ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றனவே
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ? கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்? கற்கும் கல்வி என் மகள் காண்கின்றனவே
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும் காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்வண்ணன் ஏறக் கொலோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? காண்கின்ற என் காரிகை செய்கின்றனவே
செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும் செய்வானின்றனகளும் யானே என்னும் செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் செய்யகமலக் கண்ணன் ஏறக் கொலோ? செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? செய்ய கனிவாய் இளவான் திறத்தே
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ? திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? திறம்பாது என் திருமகள் எய்தினவே
இனவேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இனவேறுகள் செற்றேனும் யானே என்னும் இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இஇனவாறிரை காத்தேனும் யானே என்னும் இஇனவாயர் தலைவனும் யானே என்னும் இஇனத்தேவர் தலைவன் வந்தேறக் கொலோ? இனவேற்கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்? இனவேற்கண்ணி என் மகள் உற்றனவே
உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கிங்கு எல்லாரும் என்னும் உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே
உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ? உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண்கொடுக்கே
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடுய வினை ஆவேனும் யானே என்னும் கொடுய வினை செய்வேனும் யானே என்னும் கொடுய வினை தீர்ப்பேனும் யானே என்னும் கொடுயான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ? கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கொடியேன் கொடு என் மகள் கோலங்களே
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலமில் நரகமும் யானே என்னும் கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் கோலம் கொள் தனி முதல் யானே என்னும் கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக் கொலோ? கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே 10 உற்றார்கட்கு
கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதிநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து?! பெருஞ்செல்வத்தாராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே