திருவாய்மொழி 5-5 எங்ஙனேயோ
5-5. எங்ஙனேயோ
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்?" — அன்னையரே, என்னை ஏன் கடிகிறீர்கள் என்று தலைவி எதிர்க்கேள்வி கேட்கும் பதிகம். திருக்குறுங்குடி நம்பியிடம் மனத்தை இழந்ததற்குத் தான் பொறுப்பல்ல என்பது அவள் நிலைப்பாடு. காதலை மறுத்துக் கடிபவர்களுக்கு எதிராகத் தன் நிலையை நியாயப்படுத்தும் தொனி இங்கே வெளிப்படுகிறது.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்? நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
நீங்க நில்லாக் கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன் முடியும் வடிவும் பாங்கு தோன்றும் பட்டூம் நாணும் பாவியேன் பக்கத்தவே
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் தக்க கீர்த்திக் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள் சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் ர கோல நீள் கொடு மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே 6 ' ஆயிரத்து
நிறைந்த வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள் சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் சென்னி நீள் முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன் கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் ர குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உர என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
அறிவரிய பிரானை ஆழியங் கையனையே அலற்றி நறிய நல்மலர் நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன ர் குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல் அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே