Skip to the text
திருவாய்மொழி

5-4. ஊரெல்லாம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஊரெல்லாம் துஞ்சி, உலகெல்லாம் நள்ளிருளாய்" — ஊரும் உலகும் உறங்க, நீரும் தேங்க, இரவு நீண்டு கொண்டே செல்லும் காட்சி. உலகம் முழுவதும் உறங்கும்போது விழித்திருப்பவளின் தனிமையை இப்பதிகம் சொல்கிறது. இரவின் நீளம் காலத்தால் அல்ல, துயரத்தால் அளக்கப்படுகிறது.

திருவாய்மொழி 5-4 ஊரெல்லாம்‌

3150

ஊரெல்லாம்‌ துஞ்சி உலகெல்லாம்‌ நள்ளிருளாய்‌ நீரெல்லாம்‌ தேறி ஓர்‌ நீளிரவாய்‌ நீண்டதால்‌ பாரெல்லாம்‌ உண்ட நம்‌ பாம்பணையான்‌ வாரானால்‌ ஆர்‌? எல்லே! வல்வினையேன்‌ ஆவி காப்பார்‌ இனியே

3151

ஆவி காப்பார்‌ இனி யார்‌? ஆழ்கடல்‌ மண்‌ விண்‌ மூடி மாவிகாரமாய்‌ ஓர்‌ வல்லிரவாய்‌ நீண்டதால்‌ காவிசேர்‌ வண்ணன்‌ என்‌ கண்ணனும்‌ வாரானால்‌ பாவியேன்‌ நெஞ்சமே! நீயும்‌ பாங்கல்லையே

3152

நீயும்‌ பாங்கல்லை காண்‌ நெஞ்சமே! நீளிரவும்‌ ஓயும்‌ பொழுதின்றி ஊழியாய்‌ நீண்டதால்‌ காயும்‌ கடூஞ்சிலை என்‌ காகுத்தன்‌ வாரானால்‌ குருகூரவர்‌ மாயும்‌ வகை அறியேன்‌ வல்வினையேன்‌ பெண்‌ பிறந்தே

3153

பெண்‌ பிறந்தார்‌ எய்தும்‌ பெருந்துயர்‌ காண்கிலேன்‌ என்று ஒண்சுடரோன்‌ வாராதொளித்தான்‌ இம்மண்ணளந்த கண்‌ பெரிய செவ்வாய்‌ எங்காரேறு வாரானால்‌ எண்‌ பெரிய சிந்தை நோய்‌ தீர்ப்பார்‌ ஆர்‌ என்னையே?

3154

ஆர்‌ என்னை ஆராய்வார்‌? அன்னையரும்‌ தோழியரும்‌ நீர்‌ என்னே? என்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌ காரன்ன மேனி நம்‌ கண்ணனும்‌ வாரானால்‌ பேரென்னை மாயாதால்‌ வல்வினையேன்‌ பின்னின்றே

3155

பின்னின்ற! காதல்‌ நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்று இராவூழி கண்‌ புதைய மூடிற்றால்‌ மன்னின்ற சக்கரத்து எம்‌ மாயவனும்‌ வாரானால்‌ இஇந்நின்ற நீளாவி காப்பார்‌ ஆர்‌ இவ்விடத்தே?

3156

காப்பார்‌ ஆர்‌ இவ்விடத்து? கங்கிருளின்‌ நுண்துளியாய்‌ சேட்பாலதூழியாய்ச்‌ செல்கின்ற கங்குல்வாய்‌ தூப்பால வெண்சங்கு சக்கரத்தன்‌ தோன்றானால்‌ தீப்பால வல்வினையேன்‌ தெய்வங்காள்‌! என்‌ செய்கேனோ?

3157

தெய்வங்காள்‌! என்‌ செய்கேன்‌? ஓரிரவு ஏழுழியாய்‌ மெய்வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்‌ கைவந்த சக்கரத்து என்‌ கண்ணனும்‌ வாரானால்‌ தைவந்த தண்தென்றல்‌ வெஞ்சுடரில்‌ தானடூமே

3158

வெஞ்சுடரில்‌ தானடூுமால்‌ வீங்கிருளின்‌ நுண்துளியாய்‌ அஞ்சுடர வெய்யோன்‌ அணிநெடூந்தேர்‌ தோன்றாதால்‌ ர செஞ்சுடர்த்‌ தாமரைக்கண்‌ செல்வனும்‌ வாரானால்‌ நெஞ்சிடர்‌ தீர்ப்பார்‌ இனி யார்‌? நின்றுருகுகின்றேனே

3159

நின்றுருகுகின்றேனே போல நெடுூவானம்‌ சென்றுருகி! நுண்துளியாய்ச்‌ செல்கின்ற கங்குல்வாய்‌ அன்றொருகால்‌ வையம்‌ அளந்த பிரான்‌ வாரான்‌ என்று ஒன்றொருகால்‌ சொல்லாது உலகோ உறங்குமே

3160

உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த பெருமானை சிறந்த பொழில்‌ சூழ்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ நிறம்‌ கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள்‌ இப்பத்தால்‌ இறந்து போய்‌ வைகுந்தம்‌ சேராவாறு எங்ஙனேயோ?