Skip to the text
திருவாய்மொழி

5-3. மாசறுசோதி

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மாசறு சோதி, என் செய்யவாய் மணிக்குன்றத்தை" — குற்றமற்ற ஒளியாகிய, செவ்வாயுடைய மணிமலையை நாடித் தேடும் பதிகம். தேடல் முடிந்தபின்னும் தேடல் தொடர்வதே இதன் இயல்பு. கண்டவனையே மீண்டும் காண விரும்பும் மனநிலை இங்கே பதிவாகிறது.

திருவாய்மொழி 5-3 மாசறுசோதி

3139

மாசறு சோதி என்‌ செய்யவாய்‌ மணிக்‌ குன்றத்தை ஆசறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே பாசறவெய்தி அறிவிழந்து எனை நாளையம்‌? ஏசறும்‌ ஊரவர்‌ கவ்வை தோழீ! என்‌ செய்யுமே?

3140

என்‌ செய்யும்‌ ஊரவர்‌ கவ்வை? தோழீ! இனி நம்மை என்‌ செய்ய தாமரைக்‌ கண்ணன்‌ என்னை நிறை கொண்டான்‌ முன்‌ செய்ய மாமை இழந்து மேனி மெலிவெய்தி என்‌ செய்யவாயும்‌ கருங்கண்ணும்‌ பயப்பூர்ந்தவே

3141

ஊர்ந்த சகடம்‌ உதைத்த பாதத்தன்‌ பேய்‌ முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்‌ என்னை நிறை கொண்டான்‌ பேர்ந்தும்‌ பெயர்ந்தும்‌ அவனோடு அன்றி ஓர்‌ சொல்லிலேன்‌ தீர்ந்த என்‌ தோழீ! என்‌ செய்யும்‌ ஊரவர்‌ கவ்வையே?

3142

ஊரவர்‌ கவ்வை எருவிட்டு அன்னை சொல்‌ நீர்‌ மடுத்து ர்‌ ஈர நெல்‌ வித்தி முளைத்த நெஞ்சப்‌ பெருஞ்செய்யுள்‌ பேரமர்‌ காதல்‌ கடல்‌ புரைய விளைவித்த காரமர்‌ மேனி நம்‌ கண்ணன்‌ தோழீ! கடியனே?

3143

கடியன்‌ கொடியன்‌ நெடுயமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌ அறிவருமேனி மாயத்தன்‌ ஆகிலும்‌ கொடிய என்‌ நெஞ்சம்‌ அவனென்றே கிடக்கும்‌ எல்லே! துடிகொள்‌ இடை மடத்தோழீ! அன்னை என்‌ செய்யுமே?

3144

அன்னை என்‌ செய்யில்‌ என்‌? ஊர்‌ என்‌ சொல்லில்‌ என்‌? தோழிமீர்‌! என்னை இனி உமக்காசை இல்லை அகப்பட்டேன்‌ முன்னை அமரர்‌ முதல்வன்‌ வண்துவராபதி மன்னன்‌ மணிவண்ணன்‌ வாசுதேவன்‌ வலையுளே

3145

வலையுள்‌ அகப்படுத்து என்னை நல்நெஞ்சம்‌ கூவிக்‌ கொண்டு அலைகடல்‌ பள்ளி அம்மானை ஆழிப்பிரான்‌ தன்னை கலைகொள்‌ அகலல்குல்‌ தோழீ! நம்‌ கண்களால்‌ கண்டு தலையில்‌ வணங்கவுமாங்கொலோ? தையலார்‌ முன்பே

3146

பேய்‌ முலை உண்டு சகடம்‌ பாய்ந்து மருதிடைப்‌ போய்‌ முதல்‌ சாய்த்து புள்வாய்‌ பிளந்து களிறட்ட தூமுறுவல்‌ தொண்டைவாய்ப்‌ பிரானை எந்நாள்‌ கொலோ? ' படுத்து யாம்‌ உறுகின்றது தோழீ! அன்னையர்‌ நாணவே

3147

நாணும்‌ நிறையும்‌ கவர்ந்து என்னை நல்நெஞ்சம்‌ கூவிக்‌ கொண்டு சேணுயர்‌ வானத்து இருக்கும்‌ தேவபிரான்‌ தன்னை ஆணை என்‌? தோழீ! உலகுதோறு அலர்‌ தூற்றி ஆம்‌ கோணைகள்‌ செய்து குதிரியாய்‌ மடல்‌ ஊர்துமே

3148

யாம்‌ மடல்‌ ஊர்ந்தும்‌ எம்‌ ஆழியங்கைப்‌ பிரானுடை தூமடல்‌ தண்ணந்துழாய்‌ மலர்‌ கொண்டு சூடூவோம்‌ யாம்‌ மடமின்றித்‌ தெருவுதோறு அயல்‌ தையலார்‌ நாமடங்கப்‌ பழி தூற்றி நாடும்‌ இரைக்கவே

3149

இரைக்கும்‌ கருங்கடல்‌ வண்ணன்‌ கண்ணபிரான்‌ தன்னை விரைக்கொள்‌ பொழில்‌ ர குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன நிரைக்கொள்‌ அந்தாதி ஹாயிரத்துள்‌ இப்பத்தும்‌ உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும்‌ தம்‌ ஊரெல்லாம்‌