Skip to the text
திருவாய்மொழி

5-2. பொலிகபொலிக

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பொலிக பொலிக பொலிக" — வாழ்க, வாழ்க என்று மும்முறை வாழ்த்தி எழும் பதிகம். வலிய உயிர்களின் சாபம் போயிற்று, நரகம் நைந்தது, யமனுக்கு இனி வேலையில்லை என்று ஆழ்வார் அறிவிக்கிறார். துயரின் நடுவே திடீரென வெடிக்கும் மகிழ்ச்சி இது — கலியுகத்திலும் இது நிகழும் என்னும் நம்பிக்கையின் அறிவிப்பு.

திருவாய்மொழி 5-2 பொலிகபொலிக

3128

பொலிக பொலிக பொலிக ர போயிற்று வல்லுயிர்ச்‌ சாபம்‌ நலியும்‌ நரகமும்‌ நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும்‌ இல்லை கலியும்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ கடல்வண்ணன்‌ பூதங்கள்‌ மண்‌ மேல்‌ மலியப்‌ புகுந்து இசை பாடி ஆடி உழி தரக்‌ கண்டோம்‌

3129

கண்டோம்‌ கண்டோம்‌ கண்டோம்‌ கண்ணுக்கு இனியன கண்டோம்‌ தொண்டீர்‌! எல்லீரும்‌ வாரீர்‌ தொழுது தொழுது நின்றார்த்தும்‌ வண்டார்‌ தண்ணண்துழாயான்‌ மாதவன்‌ பூதங்கள்‌ மண்‌ மேல்‌ பண்‌ தான்‌ பாடி நின்றாடிப்‌ பரந்து திரிகின்றனவே

3130

திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாழும்‌ புகுந்து பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக கரிய முகில்வண்ணன்‌ எம்மான்‌ கடல்வண்ணன்‌ பூதங்கள்‌ மண்‌ மேல்‌ இரியப்‌ புகுந்து இசை பாடி எங்கும்‌ இடம்‌ கொண்டனவே

3131

இடங்கொள்‌ சமயத்தை எல்லாம்‌ எடுத்துக்‌ களைவன போலே தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான்‌ தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌ கிடந்தும்‌ இருந்தும்‌ எழுந்தும்‌ கீதம்‌ பலபல பாடி நடந்தும்‌ பறந்தும்‌ குனித்தும்‌ நாடகம்‌ செய்கின்றனவே

3132

செய்கின்றது என்‌ கண்ணுக்கொன்றே ஒக்கின்றது இவ்வுலகத்து வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌ மாயத்தினால்‌ எங்கும்‌ மன்னி ர ஐயம்‌ ஒன்றில்லை அரக்கர்‌ அசுரர்‌ பிறந்தீர்‌ உள்ளீரேல்‌ உய்யும்‌ வகை இல்லை தொண்டீர்‌! ஊழி பெயர்த்திடும்‌ கொன்றே

3133

கொன்றுயிர்‌ உண்ணும்‌ விசாதி பகை பசி தீயன எல்லாம்‌ நின்று இவ்வுலகில்‌ கடிவான்‌ நேமிப்பிரான்‌ தமர்‌ போந்தார்‌ நன்றிசை பாடியும்‌ துள்ளி ஆடியும்‌ ஞாலம்‌ பரந்தார்‌ சென்று தொழுது உய்ம்மின்‌ தொண்டீர்‌! சிந்தையைச்‌ செந்நிறுத்தியே

3134

நிறுத்தி நும்‌ உள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌ உம்மை உய்யக்கோள்‌ மறுத்தும்‌ அவனோடே கண்டீர்‌ மார்க்கண்டேயனும்‌ கரியே கறுத்த மனம்‌ ஒன்றும்‌ வேண்டா கண்ணன்‌ அல்லால்‌ தெய்வம்‌ இல்லை இறுப்பதெல்லாம்‌ அவன்‌ மூர்த்தியாய்‌ அவர்க்கே இறுமினே

3135

இறுக்கும்‌ இறை இறுத்துண்ண எவ்வுலகுக்கும்‌ தன்‌ மூர்த்தி உய்யக்கொள்‌ நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்தெய்வநாயகன்‌ தானே மறுத்திரு மார்வன்‌ அவன்‌ தன்‌ பூதங்கள்‌ கீதங்கள்‌ பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்‌ மேவித்‌ தொழுது உய்ம்மின்‌ நீரே

3136

மேவித்‌ தொழுது உய்ம்மினீர்கள்‌ வேதப்‌ புனிதவிருக்கை நாவில்‌ கொண்டு அச்சுதன்‌ தன்னை ஞான விதி பிழையாமே பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து மேவித்‌ தொழும்‌ அடியாரும்‌ பகவரும்‌ மிக்கதுலகே

3137

மிக்க உலகுகள்‌ தோறும்‌ மேவிக்‌ கண்ணன்‌ திருமுர்த்தி நக்கபிரானோடு அயனும்‌ இந்திரனும்‌ முதலாக தொக்க அமரர்‌ குழாங்கள்‌ எங்கும்‌ பரந்தன தொண்டீர்‌! ஒக்கத்‌ தொழுகிற்றிராகில்‌ கலியுகம்‌ ஒன்றும்‌ இல்லையே

3138

கலியுகம்‌ ஒன்றும்‌ இன்றிக்கே தன்னடியார்க்கு அருள்‌ செய்யும்‌ மலியும்‌ சுடரொளி மூர்த்தி மாயப்பிரான்‌ கண்ணன்‌ தன்னை கலிவயல்‌ தென்னன்‌ குருகூர்க்‌ காரிமாறன்‌ சடகோபன்‌ ஒலிபுகழ்‌ ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை' மாசறுக்குமே