Skip to the text
திருவாய்மொழி

5-1. கையார்‌ சக்கரத்து

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று, பொய்யே கைம்மை சொல்லிப் புறமே" — உள்ளன்பின்றி வெளிவேடமாகவே தான் பாடி வந்ததாக ஆழ்வார் தன்னைக் குற்றம் சாட்டும் பதிகம். சொல்லில் பக்தி இருந்தும் மனத்தில் இல்லாமல் போனதை மறைக்காமல் ஒப்புக்கொள்கிறார். இத்தகைய கடும் தன்விமர்சனம் அபூர்வமானது — புகழ்பாடும் நூலில் தன்னைப் பொய்யன் என்று சொல்லிக்கொள்வது.

திருவாய்மொழி 5-1 கையார்‌ சக்கரத்து

3117

கையார்‌ சக்கரத்து என்‌ கருமாணிக்கமே! என்றென்று பொய்யே கைம்மை சொல்லிப்‌ புறமே புறமே ஆடி மெய்யே பெற்றொழிந்தேன்‌ விதிவாய்க்கு இன்று காப்பார்‌ ஆர்‌? ஐயோ கண்ணபிரான்‌! அறையோ இனிப்‌ போனாலே

3118

போனாய்‌! மாமருதின்‌ நடுவே என்‌ பொல்லா மணியே! தேனே! இன்னமுதே! என்றென்றே சில கூத்துச்‌ சொல்ல தானேல்‌ எம்பெருமான்‌ அவன்‌ என்னாகி ஒழிந்தான்‌ வானே மாநிலமே மற்று முற்றும்‌ என்னுள்ளனவே

3119

உள்ளன மற்றுளவாப்‌ புறமே சில மாயம்‌ சொல்லி வள்ளல்‌! மணிவண்ணனே! என்றென்றே உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ள மனம்‌ தவிர்ந்தே உன்னைக்‌ கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேன்‌ வெள்ளத்தணைக்‌ கிடந்தாய்‌ இனி உன்னை விட்டு என்‌ கொள்வனே?

3120

என்‌ கொள்வன்‌? உன்னை விட்டென்னும்‌ வாசகங்கள்‌ சொல்லியும்‌ வன்கள்வனேன்‌ மனத்தை வலித்துக்‌ கண்ணநீர்‌ கரந்து நின்கண்‌ நெருங்க வைத்தே எனதாவியை நீக்ககில்லேன்‌ என்கண்‌ மலினம்‌ அறுத்து என்னைக்‌ கூவி அருளாய்‌ கண்ணனே!

3121

கண்ணபிரானை விண்ணோர்‌ கருமாணிக்கத்தை அமுதை நண்ணியும்‌ நண்ணகில்லேன்‌ நடூவேயோர்‌ உடம்பில்‌ இட்டு திண்ணம்‌ அழுந்தக்‌ கட்டிப்‌ பல செய்வினை வன்கயிற்றால்‌ புண்ணை மறைய வரிந்து எனைப்‌ போர வைத்தாய்‌ புறமே

3122

புறமறக்‌ கட்டிக்‌ கொண்டு இருவல்வினையார்‌ குமைக்கும்‌ முறைமுறை ஆக்கை புகலொழியக்‌ கண்டு கொண்டொழிந்தேன்‌ நிறமுடை நால்தடந்தோள்‌ செய்ய வாய்‌ செய்ய தாமரைக்‌ கண்‌ அறமுயலாழி அங்கைக்‌ கருமேனி அம்மான்‌ தன்னையே

3123

அம்மான்‌ ஆழிப்பிரான்‌ அவன்‌ எவ்விடத்தான்‌? யான்‌ ஆர்‌? எம்மா பாவியர்க்கும்‌ விதிவாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌ கைம்மா துன்பொழித்தாய்‌! என்று கைதலை பூசலிட்டே மெய்ம்மாலாய்‌ ஒழிந்தேன்‌ எம்பிரானும்‌ என்‌ மேலானே

3124

மேலாத்‌ தேவர்களும்‌ நிலத்தேவரும்‌ மேவித்‌ தொழும்‌ மாலார்‌ வந்து இனநாள்‌ அடியேன்‌ மனத்தே மன்னினார்‌ சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ்செல்வமும்‌ நன்மக்களும்‌ மேலாத்‌ தாய்தந்தையும்‌ அவரே இனி ஆவாரே

3125

ஆவார்‌ ஆர்‌? துணை என்று அலைநீர்க்‌ கடலுள்‌ அழுந்தும்‌ நாவாய்‌ போல்‌ பிறவிக்‌ கடலுள்‌ நின்று நான்‌ துளங்க தேவார்‌ கோலத்தொடும்‌ திருச்சக்கரம்‌ சங்கினொடுூம்‌ ஆவா! என்று அருள்‌ செய்து அடியேனொடும்‌ ஆனானே

3126

ஆனான்‌ ஆளுடையான்‌ என்று அஃதே கொண்டு உகந்து வந்து ' கூற்றுச்‌ கூயருளாய்‌ இந்நாள்‌ தானே இன்னருள்‌ செய்து என்னை முற்றவும்‌ தான்‌ ஆனான்‌ மீனாய்‌ ஆமையுமாய்‌ நரசிங்கமுமாய்க்‌ குறளாய்‌ கானார்‌ ஏனமுமாய்க்‌ கற்கியாம்‌ இன்னம்‌ கார்வண்ணனே

3127

கார்வண்ணன்‌ கண்ணபிரான்‌ கமலத்‌ தடங்கண்ணன்‌ தன்னை ஏர்வள ஒண்கழனிக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன சீர்வண்ண ஒண்தமிழ்கள்‌ இவை ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌ ஆர்வண்ணத்தால்‌ உரைப்பார்‌ அடிக்கீழ்‌ புகுவார்‌ பொலிந்தே