திருவாய்மொழி 4-10 ஒன்றும் தேவும்
4-10. ஒன்றும் தேவும்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று" — தேவரும் உலகும் உயிரும் வேறு எதுவும் இல்லாதிருந்த அந்நாளில், நான்முகனையும் தேவர்களையும் படைத்தவன் யார் என்று ஆழ்வார் கேட்கும் பதிகம். படைப்புக்கு முந்தைய நிலையை முன்வைத்து முதல்வனை நிறுவும் முறை இது. நான்காம் பத்து இந்த அடிப்படைக் கேள்வியுடன் நிறைவடைகிறது.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல்மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத்! தெய்வம் நாடூதிரே |
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் அவன் மேவி உறை கோயில் மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனைப் பாடியாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர்! பரந்தே
பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்தெய்வழுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்தோடுமினே
ஓடி ஹப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழியேறிக் கண்டீர் கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் ஆடூ புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே 7 ' மற்றெத்
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே கொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும் அவையாகிய மற்றும் தன் பால் அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப் பிரான் அமரும் வளங்கொள் தண்பணை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனை உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே
உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன் பால் மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூர் அதனுள் குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
ஆட்செய்த ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண்குருகூர் நகரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே