என்னாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வண்மையைப் பாடிப்பற எம்பிரான் வண்மையைப் பாடிப்பற
3-9. என்னாதன்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
இறைவனின் செயல்களை ஒவ்வொன்றாக நினைவுகூரும் பதிகம். சத்தியபாமைக்காகப் பாரிஜாத மரத்தையே பறித்து வந்தது, மூவுலகும் ஆண்டு பரதனுக்கு அருளியது என அவதாரங்களின் கதைகள் இடம்பெறுகின்றன. அன்பினால் தேவர் உலகோடும் மோதத் தயங்காதவன், அடியவனுக்காக அரசையே துறக்கவும் தயங்குவதில்லை. கொடுப்பதிலும் விட்டுக்கொடுப்பதிலும் அவனுக்கு அளவே இல்லை என்பதே இதன் சாரம்.
பெரியாழ்வார் திருமொழி 3-9 என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேவ்டிதங்களை இரண்டு தோழியர் எதிரெதிராகக் கூறி உந்தி பறத்தல்)
என்வில்வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில்வலித்து முதுபெண் உயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் பாடிப்பற
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்று அங்கேக விரைந்து எதிர் வந்து ர் செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்றழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன, சீற்றமிலாதானைப் பாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற (க)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற
முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்க்கு அருளென்று அவன்பின் தொடர்ந்த ர் படியில் குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற
தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்பனகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக்கரசனைப் பாடிப்பற
மாயச் சகடம் உதைத்து மருதிறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசீந்த ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல் செந்தமிழ்த் தென்புதுவை விட்டுசித்தன் சொல் ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே