திருவாய்மொழி 4-6 தீர்ப்பாரை
4-6. தீர்ப்பாரை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!" — இவளுடைய நோயைத் தீர்ப்பவரை இனி எங்கே தேடுவோம் என்று தாய்மார் திகைக்கும் பதிகம். மந்திரவாதிகளும் தெய்வம் ஏற்றுபவர்களும் தோற்றுவிட்டதைச் சொல்கிறார். உலக மருந்துகள் தீர்க்க முடியாத ஒரு நோயை ஆழ்வார் வெளிப்படுத்துகிறார் — நோய்க்கு மருந்து நோயை வருவித்தவனே.
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடூதும் அன்னைமீர்! ஓர்ப்பால் இவ்வொண்ணுதல் உற்ற நல்நோய் இது தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந்தெய்வம் இசைப்பின்றி நீரணங்காடும் இளந்தெய்வம் அன்றிது திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்றிவள் கேட்க நீர் இசைக்கிற்றிராகில் நன்றேஇல் பெறும் இது காண்மினே
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டூவிச்சி சொற்கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் மதுவார் துழாய்முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே
மருந்தாகும் என்று அங்கோர் மாய வலவை சொற்கொண்டு நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகேமும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்காடுதல் அன்றந்தோ! குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் கவளக் கடாக்களிறட்ட பிரான் திருநாமத்தால் தவளப் பொடுக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே
தணியும் பொழுதில்லை நீர் அணங்காடுதிர் அன்னைமீர்! பிணியும் ஹிகின்றதில்லை பெருகும் இதுவல்லால் மணியின் அணிநிற மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலின் மற்றில்லை கண்டீர் இவ்வணங்குக்கே
அணங்குக்கு அருமருந்தென்று அங்கோர் ஆடும்கள்ளும்பராய் சுணங்கை' எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்! உணங்கல் கெடக் கழுதையுதடாட்டம் கண்டு என் பயன்? வணங்கீர்கள் மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரையே
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய் ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழ விட்டூ நீர் அணங்காடுதல் கீழ்மையே
கீழ்மையினால் அங்கோர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் நாழ்மை பல சொல்லி நீரணங்காடும் பொய் காண்கிலேன் ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்! மன்னப்படு மறை வாணனை வண்துவராபதி பொழுதின்றி ? துணங்கை மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுதாடுமே
தொழுதாடி தூமணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் தொழுதாடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே