திருவாய்மொழி 4-5 வீற்றிருந்து
4-5. வீற்றிருந்து
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல" — வீற்றிருந்து ஏழுலகையும் ஒற்றைச் செங்கோலால் ஆளும் அம்மானைப் பாடும் பதிகம். ஆற்றல் மிக்கவனாக அவனை வருணித்தாலும், அவ்வாற்றல் வெம்மை அல்ல, அரசாட்சி என்பதை ஆழ்வார் காட்டுகிறார். ஆளுதல் என்பது அடக்குதல் அல்ல, ஒழுங்கு நிலைநிறுத்துதல்.
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல விவில்சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை வெம்மா பிளந்தான் தன்னை போற்றி என்றே கைகளாரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
மையகண்ணாள் மலர்மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வியவே
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் விீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன் ஆவியென்னாவியை யானறியேன் செய்தவாற்றையே
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வெய்தினேன் காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே
கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு அரியதுண்டோ எனக்கு? இன்று தொட்டும் இனி என்றுமே
என்றும் ஒன்றாகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு ' நிகழ்ந்தன இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டூம் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண்தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல்வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண்திசையும் தவிராது நின்றான் தன்னை கூனற்சங்கத் தடக்கையவனைக் குடமாடியை வானக்கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தொடு விற்றிருந்தும் மணங்கூடியும் கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் தன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே
மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத்து அண்ணலை வாரி வாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே