திருவாய்மொழி 4-2 பாலனாய்
4-2. பாலனாய்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"பாலனாய் ஏழுலகு உண்டு, பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்" — குழந்தையாய் ஏழுலகையும் உண்டு ஆலிலையில் துயின்றவனைப் பாடும் பதிகம். தலைவியின் நிலையைத் தோழி சொல்லும் பாவனையில் அமைந்தது. உலகை உண்டவனுடைய திருவடிகளில் சூட்டப்படும் மலரையே அவள் வேண்டுகிறாள் — பெரியது வேண்டாம், அவனுடையது ஒன்று போதும்.
பாலனாய் ஏழுலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் ர் தாளிணை மேலணி தண்ணந்துழாய் என்றே மாலுமால் வல்வினையேன் மடவல்லியே
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் நல்லடி மேலணி நாறுதுழாய் என்றே சொல்லுமால் சூழ்வினையாட்டியேன் பாவையே
பாவியல் வேத நன்மாலை பல கொண்டு தேவர்கள் மாமுனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேலணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினையாட்டியேன் கோதையே
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன் பாதங்கள் மேலணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே
தோளிசேர் பின்னை பொருட்டு எருதேழ் தழீஇக் கொய் பூம் பொழில் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் கோளியார் கோவலனார் குடக்கூத்தனார் தாளிணை மேலணி தண்ணந்துழாய் என்றே நாளுநாள் நைகின்றதால் என்தன் மாதரே
மாதர்மா மண்மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியங்காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொன் துழாய் என்றே ஓதும்மால் எய்தினன் என்தன் மடந்தையே
மடந்தையை வண்கமலத்திருமாதினை தடங்கொள் தார்மார்பினில் வைத்தவர் தாளின் மேல் வடங்கொள் பூந்தண்ணந்துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் வாணுதலீர்! என் மடக்கொம்பே
கொம்புபோல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பெரி உய்த்தவர் தாளிணை மேலணி வம்பவிழ் தண்ணந்துழாய் மலர்க்கே இவள் நம்புமால் நான் இதற்கு என் செய்கேன்? நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்ஙனே சொல்லுகேன்? யான் பெற்ற ஏழையை சங்கென்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்! மின்செய் பூண்மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன்செய் பூண்மென்முலைக்கென்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலிபுகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மலிபுகழ் வானவர்க்காவர் நற்கோவையே