திருவாய்மொழி 3-8 முடியானே
3-8. முடியானே
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும் சீரடியானே!" — முடியுடையவனே, திருவடியுடையவனே என்று அங்கம் அங்கமாக விளித்து அழைக்கும் பதிகம். ஆழ்கடல் கடைந்தவனே, புள்ளூர்பவனே என்று செயல்களாலும் அழைக்கிறார். அழைப்பே பாட்டாகும் வடிவம் இது — பெயர்களை அடுக்குவதன் மூலமே அருகில் வருகிறார்.
முடியானே! மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடுயானே! கொண்டல் வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே
நெஞ்சமே! நீள்நகராக இருந்த என் தஞ்சனே! தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே! ர் ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே! நாள் இளந்திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடின்றி பைகொள் பாம்பேறி உறை பரனே! உன்னை மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே
கண்களால் காண வருங்கொல்? என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து திண் கொள்ள ஜர்க்கும் கிடந்து என் செவிகளே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று புவியின் மேல் பொன்னெடும் சக்கரத்து உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனதாவியே
ஆவியே! ஆரமுதே! என்னை ஆளுடை தூவியம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய்! பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப் பெறேன் உன கோலமே
கோலமே! தாமரைக் கண்ணதோர் அஞ்சன நீலமே! நின்று எனதாவியை ஈர்கின்ற தென்னிலங்கைக்கு சீலமே! ர் சென்று செல்லாதன முன்னிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?
கொள்வன் நான் மாவலி! மூவடி தா என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மாமருதினிடை போய எம் பெருந்தகாய்! உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை நலங்கொள் சீர் நன்குருகூர்ச் சடகோபன் சொல் வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே